புதிய கல்விக் கொள்கை: கேள்வி- பதில் நிகழ்வை ஒத்திவைத்த மத்திய கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2020

புதிய கல்விக் கொள்கை: கேள்வி- பதில் நிகழ்வை ஒத்திவைத்த மத்திய கல்வித்துறை அமைச்சர்


புதிய கல்விக் கொள்கை குறித்து சமூக வலைதளத்தில் நடைபெறுவதாக இருந்த கேள்வி-பதில் நிகழ்வை மத்திய கல்வித்துறை அமைச்சர் ஒத்திவைத்துள்ளார்.


34 ஆண்டுகளுக்குப் பிறகு,புதிய கல்விக் கொள்கை ஆளும் பாஜக அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன


இதற்கிடையே மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''புதிய கல்விக் கொள்கை குறித்து சமூக வலைதளத்தில் நானும், கல்வித்துறை அமைச்சகமும் செப்டம்பர் 1-ம் தேதி நாள் முழுவதும் பொது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளோம். மக்கள் தங்களின் கேள்விகளை #NEPTransformingIndia என்ற ஹேஷ்டேகுடன் இணைத்துக் கேட்கலாம்'' என்று கூறியிருந்தார்.


 


இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து நடைபெறுவதாக இருந்த கேள்வி- பதில் நிகழ்வை மத்திய கல்வித்துறை அமைச்சர் ஒத்திவைத்துள்ளார். இதுகுறித்துக் கல்வி அமைச்சகம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


அதில், ''குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு காரணமாக #NEP2020 குறித்த பிரச்சாரத்தைத் தள்ளி வைக்க முடிவெடுத்துள்ளோம். கேள்வி- பதில் நிகழ்வுக்கான புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி