அரசு பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் வேலை - kalviseithi

Sep 25, 2020

அரசு பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் வேலை

 


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சமூக நலத்துறை. இதற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  


மொத்த காலியிடங்கள்: 422


அமைப்பாளர்: 158


தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 


சமையல் உதவியாளர்: 264


தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 31.08.2020 தேதியின்படி 21 முதல் - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி ஆணையர்கள் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2020


மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tn.gov.in/ -இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

6 comments:

 1. நேர்மையான முறையிலா?

  ReplyDelete
 2. வாய்ப்பு இல்லை ராஜா

  ReplyDelete
 3. திருமணமாகாமல் இருக்கும் 40 வயதுடைய பெண்களுக்கு சத்துணவு பணிக்கோ வேறு எந்த துறையிலும் முன்னுாிமை வழங்கலாமல சாா்.தமிழக அரசு பாிந்துரைக்குமா

  ReplyDelete
 4. பஞ்சாயத்து தலைவரின் மகள், கவுன்சிலர் மகள், நாட்டாமையின் மகள் ஆகியோருக்குவேலை உறுதி.

  ReplyDelete
 5. சார் அப்பிளிக்கேஷன் பாம் ஆன்லைன் இல்லை பாம் பில்லா
  பா

  ReplyDelete
 6. சார் விண்ணப்ப படிவம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி