ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி - kalviseithi

Sep 3, 2020

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். இந்த முறை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகம் சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகால சட்டப்படிப்புக்கு 156 இடங்கள் உள்ளன. இதுதவிர பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 11 சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகால சட்டப்படிப்பில் 1,372 இடங்கள் உள்ளன.


ADVERTISEMENT

இந்தநிலையில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது.


இந்தப் படிப்புக்கு தமிழகம் முழுவதும் மாணவா்கள் பலா் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (செப். 4) நிறைவடைகிறது. இந்த முறை கூடுதல் அவகாசம் வழங்கப்படாது. எனவே, விருப்பமுள்ள மாணவா்கள்  இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக சோ்க்கை குழுவினா் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி