சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்திய ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்திய ஆசிரியர்கள்

 


சிவகங்கை மாவட்டம் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு ஆசிரியர்கள் கவுரவப்படுத்தினர்.

திருப்பத்தூர் அருகே சேவினிப்பட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி முருகேசன், ராதிகா. இவர்களது மகள் சத்யபிரியா அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தார்.


இவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் நடந்த தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வை எழுதினார்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் மாணவி சத்யபிரியா மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தார்.


மேலும் இச்சாதனையை ஊக்குவிக்கும் விதமாக, ஆசிரியர்களின் முயற்சியால் மாணவி சத்தியபிரியாவின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல்தலையை அஞ்சல்துறை வெளியிட்டது.

மேலும் அந்த மாணவியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டினர்.

இதுகுறித்து சத்யபிரியா கூறுகையில்,‘‘ நான் இதுவரை தேசத்தலைவர்களின் அஞ்சல்தலையை தான் பார்த்துள்ளேன். தற்போது என்னுடைய புகைப்படமே அஞ்சல் தலையில் வெளியிட்டுள்ளது எனக்கு மிகுந்த கவுரமாக உள்ளது. தேர்வில் வெற்றி பெற ஊக்குவித்த பெற்றோருக்கும், பயிற்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்,’’ என்று கூறினார்.

2 comments:

  1. அருமையான பள்ளி .. எங்கள் பள்ளியில் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறேவ நேரம் சரியாக உள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி