தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ' கியூ.ஆர் . ' குறியீடுடன்புதிய அடையாள அட்டை. - kalviseithi

Sep 22, 2020

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ' கியூ.ஆர் . ' குறியீடுடன்புதிய அடையாள அட்டை.

 

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ' கியூ.ஆர் . ' குறியீடுடன்புதிய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது சென்னை , செப்.22 தமிழக அரசின் அனைத்து துறைகளின் தலைமை அலுவல கங்களும் சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயல கத்தில் தான் இயங்கி வருகின்றன . 

முதல் - அமைச்சர் , துணை முதல் - அமைச்சர் , அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை களின் உயர் அதிகாரிகளின் அலுவலகங்களும் இங்கு தான் உள்ளன . தலைமைச் செயலகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் . இவர்களுக்கு ஏற்கனவே அரசால் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள் ளது . அதில் ஊழியர்களின் புகைப்படத்துடன் விவரங்கள் இடம்பெற்றுள்ளன . 

இந்த நிலையில் ' கியூ.ஆர் . ' குறியீடு கொண்ட பிரத்தியேக அடையாள அட்டை புதிதாக கொடுக்கப்பட உள்ளது . இந்த ' கியூ.ஆர் . ' கோர்டில் ஸ்கேன் செய்தால் அந்த ஊழியர்களின் விவரங்கள் அனைத்தும் தெரிந்துவிடும் . இதற்காக ஊழி யர்களை புகைப்படம் எடுக்கும் பணி நேற்று முதல் தொடங் கியுள்ளது . 

ஏற்கனவே தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்த ஊழி யர்கள் அழைக்கப்பட்டு தலைமைச்செயலகத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது . முதல் நாளான நேற்று 745 பேருக்கு புகைப்படம் எடுக்கப் பட்டது . இன்று ( செவ்வாய்க்கிழமை ) 775 பேருக்கும் , நாளை 730 பேருக்கும் , நாளை மறுதினம் 586 பேருக்கும் , வெள்ளிக்கி ழமை 736 பேருக்கும் புகைப்படம் எடுக்கப்பட உள்ளது . * இதற்கான பணிகள் அனைத்தும் 25 - ந் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . அதன் பின்னர் , அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது . 

இதற்கான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அதி காரிகள் தெரிவித்தனர் .

1 comment:

  1. திமுக அரசியல் விளம்பரம் வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி