பள்ளி கல்வி துறை கட்டடங்கள் திறப்பு - kalviseithi

Sep 20, 2020

பள்ளி கல்வி துறை கட்டடங்கள் திறப்பு பள்ளிக் கல்வித்துறை சார்பில், 49.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.


சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், 1.22 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன், 39.90 கோடி ரூபாய் மதிப்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கட்டடம் கட்டப்பட்டுள்ளது.இதில் ஆசிரியர் தேர்வு வாரியம்,  பள்ளிக்கல்வி இயக்குநரகம் மற்றும் கல்வி தொலைக்காட்சி நிலையம் ஆகியவை இதில் செயல்பட உள்ளன.

நபார்டு கடனுதவி


நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், கோவை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில், ஐந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 9.70 கோடி ரூபாய் மதிப்பில், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளன.இவற்றை, முதல்வர் திறந்து வைத்தார்.


நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் பங்கேற்றனர். அத்துடன், பள்ளிக் கல்வி இயக்ககத்தின், அமைச்சுப் பணிக்கு, 635 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

1 comment:

  1. இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு மட்டுமே அதிலும் தற்போது படித்து முடித்த இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வெயிட்டேஜ் என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இதற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு கடினமாகப் படித்து உழைத்தவர்களுக்கு இவர்களின் முறையில் எப்படியும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அட்லீஸ்ட் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவாவது சீனியாரிட்டியையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் குழந்தைகளையும் படிக்கவைத்துக் கொண்டு கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோரிக்கையை இந்த ஆட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நீங்கள் நினைப்பதுபோல் YOUNGSTERS-க்கு கிடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இவர்கள் எப்போதும் பணிநியமன தடைச்சட்டம் கொண்டுவந்து இளைஞர்களையெல்லாம் முதியோர் ஆக்கிவிடுவார்கள். பணிவாய்ப்பு கிடைக்கும் போது பல ஏழைக்குடும்பங்கள் முன்னேறும். ஆனால் இவர்கள் ஆட்சியில் அப்படி அதிகம் நடைபெறுவதில்லை. பணிநியமனம் நடைபெறுவதை உங்கள் அருகில் யாருக்கும் கிடைத்திருந்தால் விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் இவர்களின் பணிநியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தான் (அதுவும் வெறும் 7000 ரூபாயில் தான்) நடைபெற்றுள்ளது. இதில் பணிநியமனம் பெற்றவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளார்கள்(மருத்துவத்துறையில் நர்ஸ், காவல்துறை, பகுதிநேர ஆசிரியர்கள் என ஒவ்வொன்றிலும்)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி