ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்த திட்டம்! - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2020

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்த திட்டம்! - அமைச்சர் செங்கோட்டையன்

 


ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் புத்தாக்க பயிற்சியியை இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடத்த பரிசீலிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம்  மலைக்கிராம மக்களுக்கான நலத்திட்ட  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 38 பேருக்கு வீட்டு மனைப் பட்டாவை வழங்கினார்.


மேலும் பெரியகொடிவேரி பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அவர் விளாங்கோம்பை மலை வாழ் மக்கள் கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.


ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு  அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சியினை ஆன்வைலன் மூலம் நடத்த முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

1 comment:

  1. Nice information regarding the latest education related information

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி