மாணவர்களிடையே போக்குவரத்து, உணவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2020

மாணவர்களிடையே போக்குவரத்து, உணவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு.


கொரோனா காலத்தில் மாணவர்களிடையே போக்குவரத்து, உணவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். 


இதற்கிடையே கடந்த 5 மாதங்களாக மாணவர்கள் வளாகத்துக்கு வராதபோதும், சில கல்லூரிகள் போக்குவரத்து, உணவுக் கட்டணத்தைக் கட்டச் சொல்வதாகப் புகார் எழுந்தது.இந்நிலையில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (ஏஐசிடிஇ) போக்குவரத்து, உணவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏஐசிடிஇ, அனைத்துத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பயன்படுத்தாத வசதிகளுக்காகக் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது. குறிப்பாக போக்குவரத்து மற்றும் உணவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. எனினும் போக்குவரத்து மற்றும் உணவுக்கான பராமரிப்புக் கட்டணத்தை வேண்டுமெனில் வசூலித்துக் கொள்ளலாம். இதைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக நவம்பர் 10ஆம் தேதிக்குள் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை திரும்பப் பெறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உத்தரவிட்டிருந்தது. 


மத்திய அரசின் புதிய ஊரடங்கு தளர்வு அறிவிப்பின்படி, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 30 வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. சென்னை சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் tuition fee கட்டினால் தான் ஆன்லைன் வகுப்பில் டெஸ்ட் எழுதமுடியும் என்று கூறினார். கட்டாயப்படுத்தியதால் ஒருத்தொகையை கட்டினேன், ஆனால் அந்த தொகையை பேருந்து மற்றும் establishment fee என்று பில் அனுப்பி உள்ளனர், திறக்காத கல்லூரிக்கு முதலில் பேருந்து கட்டணம் வசூலித்துவிட்டனர்.

    ReplyDelete
  2. *கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*


    *நாள்: 05/09/2020*

    *இடம்: காளைமாடு சிலை அருகே ஈரோடு*

    *நேரம்:காலை9:30*

    *ஆளும் அரசை கண்டித்து ஆசிரியர் தினத்தன்று ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது*

    *நமது சங்கத்தால் திட்டமிடபட்டுள்ள இந்த ஆர்பாட்டத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த நண்பர்கள் அதிக அளவில் காணவேண்டும் என்பதை தெரிவித்து க்கொள்கிறோம்.*

    *ஈரோட்டிற்கு வர உள்ள நண்பர்கள் வாட்ஸ் அப்பில் உங்கள் பெயரை பதிவிடவும்*

    *திரு. தினேஷ்*
    *99429 19875*

    *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்*

    ReplyDelete
  3. அர‌சாங்க‌த்திற்கு அனுச‌ர‌ணையாக‌ ந‌ட‌ந்து கொள்வ‌து தான் திற‌மையா?..
    இது வ‌ன்மையாக‌ க‌ண்டிக்க‌த்த‌க்க‌ ந‌ட‌வ‌டிக்கை..
    த‌மிழ்நாடு அர‌சூழிய‌ர் என்றால் எட‌ப்பாடி சொற்ப‌டி கேட்டு தான் ந‌ட‌க்க‌ வேண்டுமா?..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி