தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா?: விரைவில் கருத்து கேட்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2020

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா?: விரைவில் கருத்து கேட்பு!

 

காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு, பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


கொரோனா பரவல் தடுப்புக்காக, நாடு முழுவதும், பள்ளி, கல்லுாரிகளுக்கு, மார்ச் முதல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களின் விருப்பத்துடன், நேற்று முதல் பள்ளிகளில் வகுப்புகளை துவங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.


அதன்படி, மேற்கு வங்கம், ஆந்திரா, அசாம், கோவா, பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில், நேற்று முதல், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில், ஆலோசனை நடந்து வருகிறது. வரும், 30ம் தேதி வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


அதேநேரம், காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர் பிரதிநிதிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்டு, பள்ளி திறப்புக்கான தேதியை முடிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அக்., 2ல் காந்தி ஜெயந்தி முடிந்ததும், பள்ளிகளை திறந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதலில் முழு வீச்சில் வகுப்புகளை நடத்த, ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் வலியுறுத்துவதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

14 comments:

 1. 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கவும் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஐயா

  ReplyDelete
 2. கருத்து கேட்பு எத்தனை முறை தான்

  ReplyDelete
 3. கருத்துக் கேட்பு எதுக்குங்க எத்தனை முறைதான் கருத்து கேட்டீங்க மற்ற துறைகள் எல்லாம் கருத்துக்களை கேட்டு தான் திறந்தீர்களா? பாவம் மாணவர்களின் கல்வி... எல்லோருக்கும் கிடைக்காமல் இருந்தால் பரவாயில்லை ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் படிக்கும் நிலை உள்ளது.. அரசு பள்ளி மாணவர்களின் நிலை பெரும் கேள்வி குறி ??? எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் இன்று வேலைக்கு சென்று இருக்கிறார்களோ..??

  ReplyDelete
  Replies
  1. U r correct.government students all poor family.how is possible mobile phone and data to the online class.village students affected this time

   Delete
 4. 6 to 12 varai school open pannalam. 1 to 5 vendam.

  ReplyDelete
 5. Suggestions from parents will never get a positive reply.

  ReplyDelete
 6. 10,11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு மற்றும் பள்ளிகளை திறக்கவும்... ஏனெனில் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு online வகுப்பு ஒரு எட்டாக்கனியாக உள்ளது.then how is possible mobile phone and data to the online class.so village students affected this time.so private teacher's also affected for this time so please open for school.

  ReplyDelete
 7. Ensure neatness proper water and sanitation in schools particularly in rural areas. Many govt.schools are without sanitation. Allot money for this and see that it is properly utilized. The grants given to many govt.schools are not utilized

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி