சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2020

சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிதமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் நலத்திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்.18) தொடங்கி வைத்தார்.


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''அரசால் அமைக்கப்பட்ட குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.


நீட் நுழைவுத் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீதக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோல எத்தனை போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பாடத்திட்டத்தை உருவாக்குவோம்.


மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, கல்வித் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் ஒதுக்கப்படும். கரோனா முடிவுக்கு வந்த பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.


அதேபோலச் சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

19 comments:

 1. Replies
  1. இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு மட்டுமே அதிலும் தற்போது படித்து முடித்த இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வெயிட்டேஜ் என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இதற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு கடினமாகப் படித்து உழைத்தவர்களுக்கு இவர்களின் முறையில் எப்படியும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அட்லீஸ்ட் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவாவது சீனியாரிட்டியையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் குழந்தைகளையும் படிக்கவைத்துக் கொண்டு கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோரிக்கையை இந்த ஆட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நீங்கள் நினைப்பதுபோல் YOUNGSTERS-க்கு கிடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இவர்கள் எப்போதும் பணிநியமன தடைச்சட்டம் கொண்டுவந்து இளைஞர்களையெல்லாம் முதியோர் ஆக்கிவிடுவார்கள். பணிவாய்ப்பு கிடைக்கும் போது பல ஏழைக்குடும்பங்கள் முன்னேறும். ஆனால் இவர்கள் ஆட்சியில் அப்படி அதிகம் நடைபெறுவதில்லை. பணிநியமனம் நடைபெறுவதை உங்கள் அருகில் யாருக்கும் கிடைத்திருந்தால் விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் இவர்களின் பணிநியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தான் (அதுவும் வெறும் 7000 ரூபாயில் தான்) நடைபெற்றுள்ளது. இதில் பணிநியமனம் பெற்றவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளார்கள்(மருத்துவத்துறையில் நர்ஸ், காவல்துறை, பகுதிநேர ஆசிரியர்கள் என ஒவ்வொன்றிலும்)

   Delete
 2. இது பழைய செய்தி

  ReplyDelete
 3. வாய்ப்புகள் வரும் சூழ்நிலை விரைவில் வரும் நாங்கள் தங்கள் ஆட்சி காலத்தில் பணியமர்த்த படவில்லை அம்மாவின் ஆட்சியில் பணியமர்த்த பட்டோம் வரைவில் அந்த தெய்வம் எங்கள் அம்மாவின் உதவியால் வாய்ப்புகள் வரும்

  ReplyDelete
  Replies
  1. கனவு காணுங்கள் கனவு காணுங்கள்...

   Delete
  2. ஆமாங்க நாங்கள் கனவு தான் காண்கிறோம் நாங்கள் பகல் கனவு காணவில்லை இளைஞர்களின் நாயகன் அப்துல் கலாம் அய்யா கூறிய இலட்சிய கனவு இது கட்டாயம் நிறைவேறும்.

   Delete

 4. வாய்ப்புகள் வரும் சூழ்நிலை விரைவில் வரும் நாங்கள் தங்கள் ஆட்சி காலத்தில் பணியமர்த்த படவில்லை அம்மாவின் ஆட்சியில் பணியமர்த்த பட்டோம் விரைவில் அந்த தெய்வம் எங்கள் அம்மாவின் உதவியால் வாய்ப்புகள் வரும்

  ReplyDelete
 5. Part time teachers yarum yedha pathiyum kavala padavendam iravan arulala nailadhey nadakum.

  ReplyDelete
 6. Mr.S.A.R COME ON I AM WAITING....
  😀😀😀😀

  ReplyDelete
 7. See today thinakaran news paper

  ReplyDelete
 8. Idhu arikai mattumey idhu yepodhu vendumanalum maralam

  ReplyDelete
 9. இனி எத்துனை காலம் தான் ஆடுவீர் இந்த நாட்டிலே தமிழ்நாட்டிலே......

  தூக்கி எறியும் நாள் விரைவில்.....

  ReplyDelete
 10. பத்து வருட கஷ்டம் வீண் போகாது மனம் தளராதீர்.... விரைவில் நல்ல செய்தி வரும்

  ReplyDelete
  Replies
  1. விரைவில் தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத போலி பகுதி நேர ஆசிரியர்கள் நீக்க படுவார்கள் என்று நல்ல செய்தி விரைவில் வரும்

   Delete
  2. Yes yes...part time teacher is not qualified .... politician influence vantha vanga ... there is no chance....

   Delete
 11. Exam attained to part time teacher....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி