ஆசிரியரின் பிரம்பென்னை அடிக்கவில்லை செதுக்கியிருக்கிறது.. - kalviseithi

Sep 5, 2020

ஆசிரியரின் பிரம்பென்னை அடிக்கவில்லை செதுக்கியிருக்கிறது..

 


உயிரெழுத்தும்

மெய்யெழுத்தும் உன்

தலையெழுத்தை நிர்ணயிக்குமென்று

கையெழுத்துப்போட்ட

முதல்வகுப்பு வாத்தியாரிடமிருந்து

ஆரம்பமானது அடிப்படைக்கல்வி..


உயரப்போகிறாய் நீ

உத்திரவாதம் தருகிறேன் நான்

உயர்த்திக்காட்டியதென்னை

உயர்நிலைப்பள்ளி..


மேலோர் உயர்ந்தோரென்று

மேலெழுந்த ஆர்வத்தில்

மேல்நிலைப்பள்ளியென்னை

மேன்மையாக்க...


கல்லூரிகளென்னை

கச்சிதமாய் கண்டெடுத்து

அறிவியலில் உயர்ந்தோனாக்கி

அழகு பார்த்தது..


திரும்பிப்பார்க்கிறேன்

ஆசிரியரின் பிரம்பென்னை

அடிக்கவில்லை செதுக்கியிருக்கிறது..


பேராசிரியரின் பேச்சென்னை

காயப்படுத்தவில்லை என்னை

கெளரவப்படுத்தியிருக்கிறது..


வாழ்வின் உச்சியிலென்னை

வசதியாய் ஏற்றி உட்கார வைத்த

ஏணிகளை எப்படி மறப்பேன்..!!


என் ஆசிரியப்பெருமக்கா

அடிபணிந்தே போற்றுவேன் உங்கள்

அர்ப்பணிப்பை..என்றும்

அடிமனதில் பொங்கும் அன்பே

அதன் காணிக்கை..!


#ஆசிரியர்தினவாழ்த்துகள்


ஷேக் அலாவுதீன்

6 comments:

 1. ஆசிரியர் தின வாழ்த்து மாதிரி இல்ல.. மாணவர்கள் அடிமை சாசனம் மாதிரி இருக்கு.. முதல்ல எந்த விசயத்தையும் புனிதப் படுத்தறத நிறுத்துங்கயா...

  ReplyDelete
  Replies
  1. அப்படியா அய்யா பள்ளிக்கூடம் பக்கம் போய் இருக்கியா நீ

   Delete
  2. ஆமாம் அய்யா...
   ஏன் பள்ளிக்கூடம் பக்கம் போகலனா சேர்த்துவிடப்போறிங்களா அய்யா...
   அப்படி சேர்த்துவிடும் பட்சத்தில் கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு அல்லது வேறு உலகத்தரம் வாய்ந்த கல்லூரியில் சேர்த்துவிடுங்கள் அய்யா..

   Delete
  3. ஆசிரியரை மதிக்காத ஆட்கள் கல்வி செய்தி பக்கம் வேலை என்ன

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி