ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் ஆசிரியர் தின வாழ்த்துகள். - kalviseithi

Sep 4, 2020

ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் ஆசிரியர் தின வாழ்த்துகள்.


அறிவுப்பிதாக்களுக்கு...


குறள் மட்டுமல்ல எங்கள் குரல்களும் அகரம் நவில நவின்றோதிய நல்லாத்மாக்களே

நீங்கள் கடவுளினும் மேலானவர்கள்
கண்ணெதிர் கடவுளானவர்கள்

நீங்கள் இருளகற்றிய கதிரவன் கதிர்கள்
ஏழ்மை விலக எழுத்தறிவிப்பவர்கள்

உங்கள் திட்டும் கொட்டும் 
எங்களுக்கு நல்வழியைச் சுட்டும்
 மறுகணமே
அனுசரணையோடு
அன்பும் கனிவும் இரண்டறக் கலந்தே கொட்டும்

நீங்கள் பள்ளிக்கூடத்துக் கதாநாயகர்கள்
நல்லன மட்டுமே நயமுடன் போதிக்கும் சமூக காவலர்கள்

முகம் கண்டே அகம் உணரும் அதிசய பிறவிகள்
தோள் மீது ஆதரவாய் படரும் உங்கள் கைகளே எங்களின் பெருவலி நீக்கி


அன்பான தருணங்களில்
பேரன்பு காட்டி
கண்டிக்கும் நிமிஷங்களில் 
கனிவை உள்வைத்து கடுமை காட்டி
எங்கள் உயர்வையே எதிர்ப்பார்த்துக்
காத்துக்கிடக்குற வாழ்க்கைக்காட்டி

உங்களின் பாதிப்பின்றி
ஒருபோதும் இல்லை எங்கள் வாழ்வியல்
தாய்க்கு நிகராய்
தந்தையின் உருவாய்
இருக்குறீர்
எப்போதும் எங்கள் வணக்கத்திற்குரிய குருவாய்


தன்னலமேதுமில்லா
தகைமையாளர்களே
நீங்கள் விரல்பற்றி எழுதிய நாட்கள்
எங்களுக்குப் பசுமரத்தாணி
தொடுதிரை வகுப்பெடுத்து சமூகத்தில் உயர வைத்த ஏணி

உம்மை விட உச்சம் சென்றாலும் உச்சுக்கொட்டாத நல்லாத்மா
உமை இகழும் ஈனர்களை ஒருக்காலும் மன்னிக்கவே மாட்டார் உலகின்
பரமாத்மா

மனிதம் உயர்த்தும்
ஆசிரிய உள்ளங்களே
மலிந்த இருள் இன்னும் அகல எப்போதும் நீங்கள் தேவை
இன்றுபோல் தொடரட்டும் என்றென்றும் 
உங்கள் சேவை

உங்கள்
எழுதுகோல்கள் தான்
எப்போதும் தவறுகளைத் திருத்தும்...
எங்கள் வாழ்வை உயர்த்தும்

விமர்சனங்களில் ஒடிபவர்கள் அல்லர் நீங்கள்
நீங்கள் சனங்களின் காவலர்கள்
உங்கள் அனைவருக்கும்
என் வாழ்த்து மலர்ச்செண்டு

நேர்மைத்திலகங்களே
தொடர்ந்து அறியாமை இருளகற்றுங்கள்
பற்றிப்
பரவட்டும் பாரெங்கும் அறிவு வெளிச்சம்


இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்


தோழமையுடன்,

சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.

10 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்
  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
  மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

  பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

  TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
  தேர்ச்சிபெற்றவர்களை
  நியமித்து
  அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. dei konja nal 2013 gr poratamnu solama moodikitu irukada payuthyme..ilangova .mendal ahayutingalada 2013 group

   Delete
 4. இவண் யார் என்ன போடுறதுனு தெரியாம போடுற முட்டாள். ஒரு விஷயம் போட்டால் அது சம்பந்தமான கமெண்ட் podunka.

  ReplyDelete
 5. Ivan Yaruda da comali Tet Tet Tet Yeppa samy athu oru exam nu pass panni vachukitu paragraph eluthitu irukanunga
  Nan 103 mark da athu oru exam mariye therla Athuku kasta Pattom nu 7 varusama ore post ah pottu Koldranuga pa

  ReplyDelete
 6. ஆசிரியர்கள் கடவுள், மருத்துவர்கள் கடவுள், துப்பரவாளர்கள் கடவுள்... இந்த கமண்ட்ட படிப்பவர் கடவுள் , நீ கடவுள் , நான் கடவுள் , அவன் கடவுள், அதிக கொழுப்பு பால் தரும் எருமை கடவுள் , நாய் கடவுள் , பேய் கடவுள் எல்லாரும் கடவுள்.. போங்கயா அங்குட்டு.. உங்க வேலையை ஒழுங்கா பாருங்கயா.. எந்த தொழிலுக்கும் புனித பிம்பத்தை உருவாக்காதிங்க..

  ReplyDelete
  Replies
  1. Ada aramental am not teacher but teacher la kadavul dha ne soilara athana department la Iruka workers ku education ah soilikuduthu avagala uruvakana oru person so kadavul dhan da venna.

   Delete
 7. Part time teachar sarbanga annivatuku. Teachar day ....happy a irrunga orunal engAluku ungaluku nalla days porakum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி