தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் கேட்டால் புகார் கொடுக்கலாம்: இ-மெயில் முகவரி வெளியீடு. - kalviseithi

Sep 2, 2020

தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் கேட்டால் புகார் கொடுக்கலாம்: இ-மெயில் முகவரி வெளியீடு.

 


சென்னையில் தனியார் பள்ளிகள் முழுக் கட்டணங்களைச் செலுத்துமாறு கேட்டால், புகார் கொடுக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கான இ-மெயில் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கிடையே பள்ளிகள் திறக்காத போதும் சில பள்ளிகள் உயர் நீதிமன்றம் நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டண வசூலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.


இது தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீத்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் முழுக் கட்டணத்தையும் சில தனியார் பள்ளிகள் கேட்பதாகப் பெற்றோர்கள் கூறினர்.

இதனால், 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 சதவீதத்துக்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்துப் பெற்றோர் புகார் அளிக்கும் வகையில் பிரத்யேக இ-மெயில் முகவரியை உருவாக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் முழுக் கட்டணங்களைக் கட்டுமாறு பெற்றோரைக் கேட்டால் feescomplaintcell@gmail.com என்ற இ-மெயில் மூலமாகப் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கொடுத்த email id தவறாக உள்ளது. சரியான மின் அஞ்சல் வேண்டும்.
    நன்றி!

    ReplyDelete
  2. எனக்கெல்லாம் உங்களை போல துணிச்சல் இல்ல sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி