உரிய கல்வித் தகுதி உள்ள பகுதிநேர சிறப்பாசிரியர்களை மட்டுமாவது பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கலையாசிரியர் நலச் சங்கம் வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2020

உரிய கல்வித் தகுதி உள்ள பகுதிநேர சிறப்பாசிரியர்களை மட்டுமாவது பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கலையாசிரியர் நலச் சங்கம் வேண்டுகோள்!



பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகுதி நேர ஆசிரியர்கள் 16,549 பேர்களை 110 ஆவது விதியின் கீழ் நியமித்தார். ஓவியம் , உடற்கல்வி , தொழில் கல்வி என மூன்று பிரிவுகளில் இவர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் ரூ .5 ஆயிரமாக இருந்த ஊதியத்தையும் அவர் ரூ .7 ஆயிரமாக உயர்த்தினார். அவருக்குப் பிறகு பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 2017 இல் ரூ.700 மட்டுமே ஊதியம் உயர்த்தப்பட்டது. தகுதியுள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் , பகுதி நேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் . தற்போது அறிவித்திருக்கிறார். 


இது கண்டனத்துக்குரியது. அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


8 comments:

  1. No chance poi vera exam ku prepare pannunga....

    ReplyDelete
  2. Nalla paduchu erukavangala velaikku yeppomea entha government appointment pannathu... money makes the best profession.....

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் பயிற்சி ஓவியம்.தையல் அரசு சார்பில் நடந்த முகாம் மூடப் பட்டு 13ஆண்டுகள் ஆகிய நிலையில் தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத போலி பகுதி நேர ஆசிரியர்கள் இனி எப்போதும் தகுதி ஆக வாய்ப்பு இல்லை..

    தகுதி உள்ள ஆசிரியர்கள் பணி நிரந்தரம் பெற தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்கள் வழி விட்டு விடுவது நல்லது

    ReplyDelete
  4. இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு மட்டுமே அதிலும் தற்போது படித்து முடித்த இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வெயிட்டேஜ் என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இதற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு கடினமாகப் படித்து உழைத்தவர்களுக்கு இவர்களின் முறையில் எப்படியும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அட்லீஸ்ட் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவாவது சீனியாரிட்டியையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் குழந்தைகளையும் படிக்கவைத்துக் கொண்டு கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோரிக்கையை இந்த ஆட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நீங்கள் நினைப்பதுபோல் YOUNGSTERS-க்கு கிடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இவர்கள் எப்போதும் பணிநியமன தடைச்சட்டம் கொண்டுவந்து இளைஞர்களையெல்லாம் முதியோர் ஆக்கிவிடுவார்கள். பணிவாய்ப்பு கிடைக்கும் போது பல ஏழைக்குடும்பங்கள் முன்னேறும். ஆனால் இவர்கள் ஆட்சியில் அப்படி அதிகம் நடைபெறுவதில்லை. பணிநியமனம் நடைபெறுவதை உங்கள் அருகில் யாருக்கும் கிடைத்திருந்தால் விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் இவர்களின் பணிநியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தான் (அதுவும் வெறும் 7000 ரூபாயில் தான்) நடைபெற்றுள்ளது. இதில் பணிநியமனம் பெற்றவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளார்கள்(மருத்துவத்துறையில் நர்ஸ், காவல்துறை, பகுதிநேர ஆசிரியர்கள் என ஒவ்வொன்றிலும்)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி