தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Sep 5, 2020

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதற்கு குறைந்த அளவில் ஆசிரியர்கள் போதும் என்பதால், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். 


அதே போல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.


இந்நிலையில் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-


கேரளாவில் அடுத்தாண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை. தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


சம்பளம் வழங்காதது குறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் அரசு பரிசீலிக்கும். தமிழக அரசு பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.


வேலையில்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளியில் தற்காலிக பணி வழங்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

18 comments:

 1. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்
  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
  மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

  பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

  TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
  தேர்ச்சிபெற்றவர்களை
  நியமித்து
  அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
 2. Savadiranka intha Tet msg ,kandippa poda mattargal, are you mad , lunatic,

  ReplyDelete
 3. 10,40,000 மாணவர்கள் அரச பள்ளியில் சேர்ந்தும்,1500 ஆசிரியர்கள் உபரி என்று சொல்லும் Education minister தமிழ்நாட்டுக்கு,இன்னும் எட்டு மாதம் மட்டுமே இந்த ஆட்சி அதுவரை ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட நிச்சயம் இருக்காது.அதுக்கப்புறம் இந்த அதிமேதாவியோட ஆட்டம் முடிவுக்கு வரும்.அதுவரை பொறுத்திருப்போம். வேறு வழியே இல்லை,இதுவும் கடந்து போகும்

  ReplyDelete
 4. Avan aatam mudivukku varudunna ,Enna meaning, already he is a luxurious man, he will never bother about anything, so our fate......

  ReplyDelete
 5. இவருக்கு இன்னும் ஐந்து வருடம் time இருக்குனு நினைச்சிருக்காரு போல,அய்யோ பாவம்

  ReplyDelete
 6. Kalviyin mathipaiyum kastathin mathipaiyum anaivarum unara vendum. By:2013 tet pass teacher

  ReplyDelete
 7. அரசு பள்ளியில் 1500 ஆசிரியர்கள் உபரி என்று சொல்கிற அமைச்சர் ,தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எப்படி வேலை கொடுப்பார்.நம்மையெல்லாம் முட்டாள் என்று நினைக்கிறார் அமைச்சர்

  ReplyDelete
 8. நீ ஆணிேயே புடுங்க வேண்டாம் உனது நாட்கள் என்ண்ப்படுகிறது

  ReplyDelete
 9. பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை எனினும் பணி நியமனம் சாத்தியமே... BEO, PG TRB CHEMISTRY, TRB PET போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களை உடனடியாக பணியமர்த்தலாம். மேலும் TET இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நியமனத் தேர்வோ அல்லது வெயிட்டேஜ் அடிப்படையிலோ பணியமர்த்தலாம்.

  ReplyDelete
 10. Part time teachar oruthaga irrukom

  ReplyDelete
 11. Part time teachers தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் என்பது உண்மையே.. இருப்பினும் 2012 க்கு பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தேர்வு வைத்தே பணியமர்த்த வேண்டும் என்ற விதியுள்ளதால் தங்களை தேர்வு வைத்தே பணியமர்த்துவர் என்பது என் நிலைப்பாடு. மீறி தங்களை பணி நிரந்தரம் செய்தாலும் மகிழ்ச்சியே. அதிக எண்ணிக்கையில் இருக்கும் நீங்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த கோரிக்கை வைக்கலாம்.

  ReplyDelete
 12. Part time teachers தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் என்பது உண்மையே.. இருப்பினும் 2012 க்கு பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தேர்வு வைத்தே பணியமர்த்த வேண்டும் என்ற விதியுள்ளதால் தங்களை தேர்வு வைத்தே பணியமர்த்துவர் என்பது என் நிலைப்பாடு. மீறி தங்களை பணி நிரந்தரம் செய்தாலும் மகிழ்ச்சியே. அதிக எண்ணிக்கையில் இருக்கும் நீங்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த கோரிக்கை வைக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. Sir yega job vandhadhu 2011 g.o sir apo process start pani 2012 la dha select panaga adhum illama job conform yepadiyo panatum yegaluku thara 7700 salary oru familyku correct ah irukuma sir adhuku dha poradarom

   Delete
  2. உங்களுக்கு முன்பே அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2010 ஆம் ஆண்டு 1500 பேர் பணியமர்த்தப்பட்டனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி 2010 ஆம் ஆண்டு முதல் Dted, B.Ed முடித்தவர்களுக்கு TET தேர்வு கட்டாயம். தமிழகத்தில் இதை 2012 ஆம் ஆண்டு தான் செயல் படுத்தினார்கள் இருப்பினும் 2010 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டவர்களுக்கும் TET தேர்வு கட்டாயம் என்ற அரசின் அறிவிப்பால் இன்றும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பகுதிநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப் பட்டவர்கள் தங்களின் ஊதிய உயர்வுக்காக போராடுவதே நியாயமான கோரிக்கையாக இருக்கும்.

   Delete
 13. The government is not caring about the students. definitely the students will not improve their knowledge unless they go to school. Online classes ellam set aagathu. At least as central government said, this Govt can have classes for 9 to 12, weekly thrice, in two phases...

  THINK ABOUT THE FUTURE OF THE CHILDREN

  ReplyDelete
 14. அப்படியே பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி கொடுத்துவிடலாம் லட்சக்கணக்கான பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி கொடுத்துவிட்டு தனித்தேர்வர்கள் ஆயிரக்கணக்கில் தானே உள்ளவர்கள் அவர்களுக்கும் தேர்ச்சி கொடுத்தால் என்ன மாற்றுத்திறனாளி மாணவர்கள் மறுபிறவி மாணவர்கள் என பாவப்பட்ட மாணவர்களாக எவ்வளவு பேர் அதில் உள்ளனர் ஏன் இவர்கள் மீது பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் தமிழக அரசும் தேர்வு துறையும் கருணை காட்டக்கூடாது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி