நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்: அமை்சசர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2020

நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்: அமை்சசர் செங்கோட்டையன்



நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமை்சசர் செங்கோட்டையன் கூறினார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலையை தடுக்க தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. 


இந்நிலையில் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் சுமார் 3800 மையங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வினை எழுந்த உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 238 தேர்வு மையங்களில் நீட் தேர்வானது நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தை பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத உள்ளனர். மேலும் தீவிர சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

10 comments:

  1. Sir intha tet pass ana 2013/2017/2019 engaluku ethavathu pathu panunga sir pls

    ReplyDelete
  2. Kalvi ministerku ore exam conduct panalama!!!

    ReplyDelete
  3. Akka entha uru intha kili kilikura

    ReplyDelete
  4. Ellam ayyavukku theririum valzha senkodaiyan ayya avar parikatha maethi anithium avararivarr

    ReplyDelete
  5. Tet 2020 வந்தால்
    2013 90 and above
    2017 90and above
    2019 90 and above
    எல்லோரும் சேர்ந்து stay
    வாங்கனும்
    இல்லையெனில்
    மூன்று நாம்தான்
    நாம் எவ்வளவு படித்தாலும்
    120 தாண்ட முடியாது
    அரசு ஏதோ திருட்டு
    வேலை செய்கிறது
    இவ்வளவு 90 above இருக்கும் பொழுது
    மறுபடியும் ஒரு தேர்வு
    உஷாராக இல்லையெனில்
    நடுரோட்டில்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி