புதிய கல்வி கொள்கை; இன்று கருத்து கேட்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2020

புதிய கல்வி கொள்கை; இன்று கருத்து கேட்பு



 புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு, இன்று(செப்.,24) கருத்து கேட்கிறது.


மத்திய அரசின் சார்பில், புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


உயர் கல்வி நிபுணர் குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர். உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், 'ஆன்லைன்' வழியில், இந்த கூட்டம் நடந்தது. இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக, 'ஆன்லைன்' வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

2 comments:

  1. It is great policy in my opinion...i hope this will bring equality in students without any discrimination between each and every states

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி