நெல்லையில் நீட் தேர்வு எழுத வந்த புதுமணப்பெண்: தாலி, மெட்டியை கழற்றிய பிறகு தேர்வெழுத அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2020

நெல்லையில் நீட் தேர்வு எழுத வந்த புதுமணப்பெண்: தாலி, மெட்டியை கழற்றிய பிறகு தேர்வெழுத அனுமதி



திருநெல்வேலியில் தாலிச்செயின், மெட்டியை கழற்றிய பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் செல்ல புதுமணப்பெண் அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவ, மாணவிகளை போலீஸார் சோதனையிட்டனர்.


தேர்வு அறைக்குள் ஹேர்பின், நகைகள், கொலுசு போன்றவற்றை அணியத் தடை செய்யப்பட்டுள்ளதால், தேர்வு மையங்களுக்குச் செல்லும் முன்னர் மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலெட்சுமி (20). இவர் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு நீட் தேர்வு எழுத வந்தார்.

நகைகளை கழற்ற அறிவுறுத்தல்

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த இவருக்கு, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தாலிச் செயின், மெட்டி, தலையில் பூ வைத்து வந்த முத்துலெட்சுமியை, தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் அங்கிருந்த அலுவலர்கள் நகைகளை கழற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

கணவர் சம்மதம்

தாலிச் செயின் என்பதால் முத்துலெட்சுமி தயங்கியுள்ளார். ஆனால், தேர்வு விதிமுறைப்படி நகைகள் அணிய அனுமதியில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடன் வந்த அவரது கணவர் சம்மதம் தெரிவித்ததும், தாலிச்செயின், மெட்டி ஆகியவற்றை கழற்றி கணவரிடம் முத்துலெட்சுமி கொடுத்தார். தலையில் வைத்திருந்த பூவையும் எடுத்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அவர் தேர்வு எழுதினார்.


9 comments:

  1. பஞ்சாப்பில் சிங்குகள் கொண்டையை என்ன பன்னுவாங்க

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கேள்வி… பதில் கிடைக்குமா..?

      Delete
  2. X ray எடுக்கும் போது நகையை கழட்ட சொல்றாங்க

    ReplyDelete
  3. Education department group 4 counselling date 18 & 19

    ReplyDelete
  4. நீட் என்பது பெண்கள் தாலி அறுக்கும் நிகழ்ச்சியா

    ReplyDelete
  5. தாலியை அவங்க பரீட்சை முடிந்தவுடன் அணிந்து இருப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டில் exam na தாலி அறுக்கனும் exam முடிஞ்ச தாலி கட்டிக்கனும் இது என்ன மாடு கட்டும் கயிறா தலையில் இருக்கும் மயிரா

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி