கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2020

கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்


ஆங்கில வழியில் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 


மாவட்டத்தில் தொலைதூரங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் நியாயவிலைக்கடைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும். இந்த மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கரோனா தொற்று பரவி வருவதால், அங்கன்வாடிகளில் சேர்ப்பதற்காக குழந்தைகளை பாதுகாப்போடு அழைத்து வரவேண்டிய நிலை உள்ளது. புதியகல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொட ரும். ஆங்கில வழியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

11 comments:

  1. படும்...படும்...படும்....

    ReplyDelete
  2. 2012 aperam PET teacher posting podave illa thalaivaa

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது எவனும் போஸ்டிங் கேட்டு வராதே

    ReplyDelete
  4. போஸ்டிங் போடுற ஐடியா ல இல்லை

    ReplyDelete
  5. Enga poi erpadu panirupan. Loosu mendal punjaka irpan pola

    ReplyDelete
  6. January மாதம் இடைநிலை ஆசிரியர் காலிபணியிடம் 3343 என்று சொல்லி,3 மாதத்திற்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்தது.இன்று அரசு பள்ளியில் 12,88,000 மாணவர்கள் புதிதாக சேர்கை நடைபெற்ற பிறகு ஆசிரியர் பணியிடம் அதிகரிக்க வேண்டுமே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை .ஆனால் அமைச்சர் இன்னும் ஆசிரியர்கள் உபரி என்று எல்லோர் காதிலும் பூ சுத்துகிறார்.இவருக்கு உண்மை மட்டுமே பேசும் அமைச்சர் என்று விருது கொடுத்தால் சரியாக இருக்கும்

    ReplyDelete
  7. இவர் சில மாதங்களில் உபரி அமைச்சர் ஆவார்.

    ReplyDelete
  8. எவ்வளவு நாள் தான் ஏமாற்ற முடியும். எல்லாம் ேர்தலுக்கு முன்பு தான் அதுக்கு அப்புறம் ேபச வாய்ப்பு கிடைக்காது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி