Breaking News : கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள் இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2020

Breaking News : கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள் இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி சுற்றறிக்கை!


இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள் இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி சுற்றறிக்கை!


இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை விடுத்துள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக பல மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டன. 


இதேபோல், கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டன. இதனையடுத்து கொரோனாவை காரணம் காட்டி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யூ.ஜி.சி. திட்டவட்டமாக அறிவித்தது. மேலும் கல்லூரி இறுதி தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து யூ.ஜி.சி.யின் இந்த முடிவை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். 


இந்த வழக்கானது நீதிபதி அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கொரோனா காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் இறுதியாண்டு தேர்வினை நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது என  யூ.ஜி.சி.யும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதன் பின்னர் செப்டம்பர் மாத இறுதிக்குள் பல்கலைக்கழக இறுதி தேர்வினை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. 


அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், இன்னும் ஒரிரு நாளில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள யூ.ஜி.சி.யி சுற்றறிக்கையில் விரைவில் திருத்தப்பட்ட ஆண்டு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தப்படாததால் வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி