CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பணிப் பதிவேடுகளை அப்படியே அனுப்பத் தேவையில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2020

CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பணிப் பதிவேடுகளை அப்படியே அனுப்பத் தேவையில்லை!


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும்போது, பணிப் பதிவேட்டின் நகல் பக்கங்களை அனுப்பினால் போதும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவானது கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியா்களில் ஓய்வு பெற்றவா்கள், ராஜிநாமா செய்தவா்கள், மரணம் அடைந்தவா்கள் மற்றும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு அதற்கான தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றோா், ராஜிநாமா செய்தோா், இறந்தவா்கள் ஆகியோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை வழங்கும் போது சம்பந்தப்பட்ட ஊழியா்களின் பணிப் பதிவேடானது கருவூலத் துறைக்கு அனுப்பப்படும். இந்த பதிவேட்டில் உள்ள விவரங்களை கருவூலத் துறை ஆய்வு செய்யும்.


இந்தச் சூழலில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணத்தைப் பெற விண்ணப்பிப்போரின் பணி பதிவேட்டுடன் சான்றிதழை அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய நகல் பதிப்பை அனுப்பலாம் என அரசுக்கு கருவூலம் மற்றும் கணக்குத் துறை கேட்டுக் கொண்டிருந்தது. இதனை பரிசீலித்த தமிழக அரசு, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் கோரிக்கையை ஏற்பதாக முடிவு செய்தது. பணி பதிவேட்டின் நகல் பதிப்புகளை சம்பளம் வழங்கும் அலுவலரின் ஒப்புதலுடன் அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. *கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*


    *நாள்: 05/09/2020*

    *இடம்: காளைமாடு சிலை அருகே ஈரோடு*

    *நேரம்:காலை9:30*

    *ஆளும் அரசை கண்டித்து ஆசிரியர் தினத்தன்று ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது*

    *நமது சங்கத்தால் திட்டமிடபட்டுள்ள இந்த ஆர்பாட்டத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த நண்பர்கள் அதிக அளவில் காணவேண்டும் என்பதை தெரிவித்து க்கொள்கிறோம்.*

    *ஈரோட்டிற்கு வர உள்ள நண்பர்கள் வாட்ஸ் அப்பில் உங்கள் பெயரை பதிவிடவும்*

    *திரு. தினேஷ்*
    *99429 19875*

    *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்*

    ReplyDelete
  2. *கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*


    *நாள்: 05/09/2020*

    *இடம்: காளைமாடு சிலை அருகே ஈரோடு*

    *நேரம்:காலை9:30*

    *ஆளும் அரசை கண்டித்து ஆசிரியர் தினத்தன்று ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது*

    *நமது சங்கத்தால் திட்டமிடபட்டுள்ள இந்த ஆர்பாட்டத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த நண்பர்கள் அதிக அளவில் காணவேண்டும் என்பதை தெரிவித்து க்கொள்கிறோம்.*

    *ஈரோட்டிற்கு வர உள்ள நண்பர்கள் வாட்ஸ் அப்பில் உங்கள் பெயரை பதிவிடவும்*

    *திரு. தினேஷ்*
    *99429 19875*

    *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்*

    ReplyDelete
  3. தகுதி தேர்வு என்பது உங்கள் தகுதிகளை வளர்த்து கொள்ளவே.. ctet போன்ற தேர்வுகளில் 7ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு எழுத வேண்டும்.. இதில் பாரபட்சம் இல்லை.. evolo போராட்டம நடத்தினாலும் ஒன்றும் ஆகாது படிப்பதை தவிர

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி