Final Year மாணவர்கள் அதிர்ச்சி: இறுதிப்பருவத் தேர்வு செப்.22.,முதல் இணைய வழியில் நடைபெறும்...அண்ணா பல்கலை. அறிவிப்பு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2020

Final Year மாணவர்கள் அதிர்ச்சி: இறுதிப்பருவத் தேர்வு செப்.22.,முதல் இணைய வழியில் நடைபெறும்...அண்ணா பல்கலை. அறிவிப்பு.!



தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. ஆனால், இந்த மாதம் 30-ம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே வெளியிட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த 31 மாணவர்கள் யு.ஜி.சியின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 28ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில்,கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதனால் நடத்த தடை இல்லை. மேலும் தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சிப் பெற செய்யாதீர்கள். என தீர்ப்பு வழங்கியதோடு அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.


இந்நிலையில், இறுதிப்பருவத் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதிப்பருவத் தேர்வு வரும் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.  அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இணைய வழியில் எளிதில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையும் எழுந்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு கல்லூரிகளில் இணைய வழியில் தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அப்போது இறுதி தேர்வு எழுதுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் இறுதி தேர்வுகளை வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் எழுதலாம் என்றும் கேள்விகள் சரியான விடையை தேர்தெடுக்கும் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி