Flash News : 5ஆம் கட்டத் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு. பள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

Flash News : 5ஆம் கட்டத் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு. பள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு.




5ஆம் கட்டத் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு. 

சுய விருப்பத்துடன் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்திவைப்பு.

29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி , தமிழ்நாட்டில் 1.10.2020 முதல் , அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது . இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும் , மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும் , தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும் , மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது . இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.


பள்ளிகள்,  கல்லூரிகள் இயங்குவதற்கு தடை நீட்டிப்பு.


5th Relaxation CM Announcement Press News - Download here...

12 comments:

  1. பூமி சுத்தி பூளோகம் வந்த கத உங்க கத

    ReplyDelete
  2. This year also board exam will be cancelled,and election toooooo..

    ReplyDelete
  3. Padekatha mutttal pasanga natta annnda ennna nadakumo athan nadakuthu ippo

    ReplyDelete
  4. Good decision. Safty is more important than studies.

    ReplyDelete
    Replies
    1. Unakkennappa, no work . More salary..anubavi raja....jolly than , no work .much money .jolly than, enjoy, pray God not to fade away Corona, .Untill you feel bore to be lazy,

      Delete
  5. Safetyfirst.Thisagooddecision.moreconcentationstudywell.

    ReplyDelete
  6. இதேநிலை நீடித்தால் குழந்தைகள் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து விடும். முழுவதும் நனைந்த பிறகு முக்காடு போடாமல் பள்ளிகூடம் திறக்க வழிபாருங்கள்.இல்லை என்றால் வேலைபார்க்காமல் கொடுக்கும் சம்பளத்தை நிறுத்தி பள்ளி குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்குங்கள். இல்லை என்றால் பள்ளி குழந்தைகள் குழந்தை தொழிலாளராக மாறக்கூடும்.பாவம் யோசித்து பாருங்கள்

    ReplyDelete
  7. Studentpadikkavaran.velaiko.salarikovarala.teacher.salarikkum.paiyanpadukkarathukkumsambandhamillai.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி