தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி வழங்க வேண்டும்: ‘ TET ’ தோ்வில் தோ்ச்சி பெற்றோா் வலியுறுத்தல்! - kalviseithi

Sep 5, 2020

தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி வழங்க வேண்டும்: ‘ TET ’ தோ்வில் தோ்ச்சி பெற்றோா் வலியுறுத்தல்!


அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி வழங்க வேண்டும் என ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கத்தின் மாநில தலைவா் சு.வடிவேல் சுந்தா், மாநில ஒருங்கிணைப்பாளா் ம.இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 

தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதுவரை பணி நியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். தோ்ச்சி பெற்றவா்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆனால் கடந்த ஏழாண்டுகளில் ஒரு இடைநிலை ஆசிரியா் பணி நியமனம் கூட மேற்கொள்ளப்படவில்லை. எனவே, ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாதவா்களின் சான்றிதழை, பேராசிரியா்களுக்கான தகுதிச் சான்று போன்று ஆயுட்கால சான்றிதழாக அறிவிக்க வேண்டும்

. இந்தப் பிரச்னை குறித்து இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பலமுறை அரசிடம் மனு அளித்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.


நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் அதிகளவில் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இதை கருத்தில் கொண்டு பள்ளி திறந்தவுடன் 2013-ஆம் ஆண்டு டெட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் அரசுப் பள்ளியில் பணி வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளனா்.

46 comments:

 1. Tet pass பண்ண வங்களுக்கு வேலைகேட்டா போராட்டம் என்று நம்பலாம்.நீங்க என்னடான்னா vacant இருக்குறப்ப எதுக்கு தொகுப்பூதியத்தில் பணிநியமனம் கேட்குறீங்க.நீங்க TET Pass pannavanga ஆதரவாளர்களா?இல்லை ADMK Govt ஆதரவாளர்களா?இல்லை,அடிமை வம்சமா?we want only permanant employment

  ReplyDelete
  Replies
  1. 100% உண்மை. தற்போது அரசுப்பள்ளியில் 10,00,000 மேல் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இப்போது தொகுப்பூதியத்தில் பணி எதற்காக கேட்க வேண்டும். அதுவும் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டுமா? இது போன்று சுயநலமாக சிந்திப்பதனால் தான் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் இப்படி சான்றிதழ் காலாவதி ஆகிவிடும் நிலைக்கு வந்து விட்டனர். பொதுநலம் கருதி நியாயமான முறையில் சிந்தித்தால் தான் வெற்றி கிடைக்கும்.

   Delete
  2. 100% உண்மை. தற்போது அரசுப்பள்ளியில் 10,00,000 மேல் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இப்போது தொகுப்பூதியத்தில் பணி எதற்காக கேட்க வேண்டும். அதுவும் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டுமா? இது போன்று சுயநலமாக சிந்திப்பதனால் தான் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் இப்படி சான்றிதழ் காலாவதி ஆகிவிடும் நிலைக்கு வந்து விட்டனர். பொதுநலம் கருதி நியாயமான முறையில் சிந்தித்தால் தான் வெற்றி கிடைக்கும்.

   Delete
  3. 100% உண்மை. தற்போது அரசுப்பள்ளியில் 10,00,000 மேல் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இப்போது தொகுப்பூதியத்தில் பணி எதற்காக கேட்க வேண்டும். அதுவும் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டுமா? இது போன்று சுயநலமாக சிந்திப்பதனால் தான் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் இப்படி சான்றிதழ் காலாவதி ஆகிவிடும் நிலைக்கு வந்து விட்டனர். பொதுநலம் கருதி நியாயமான முறையில் சிந்தித்தால் தான் வெற்றி கிடைக்கும்.

   Delete
 2. போராட்டம் நடத்த வேண்டும்.tet pass panuvangalugu job poda venndam.ellurom sernrhu kek vendum

  ReplyDelete
 3. போராட்டம் நடத்த வேண்டும்

  ReplyDelete
 4. எங்கே job??. அடுத்த ேர்வை நடத்தி 500 collect பன்னட்டும் but job than ???? 2013, 2017, 2019, 2021 .............

  ReplyDelete
 5. IAM 2013 passed candidate. But no job . Tntet exam cancel panna நாடு முழுவதும் போராட்டம் பண்ண வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. போராட்டம் பண்ணுனா தான் ஒரு முடிவு கிடைக்கும்.

   Delete
 6. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்
  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
  மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

  பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

  TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
  தேர்ச்சிபெற்றவர்களை
  நியமித்து
  அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
 7. வேலையில்லாமல் உள்ள
  தனியார் பள்ளி
  ஆசிரியர்களுக்கு
  தேவைப்பட்டால் அரசுப்
  பள்ளியில் தற்காலிகப்
  பணி வழங்கப்படும்

  ReplyDelete
 8. வேலையில்லாமல் உள்ள
  தனியார் பள்ளி
  ஆசிரியர்களுக்கு
  தேவைப்பட்டால் அரசுப்
  பள்ளியில் தற்காலிகப்
  பணி வழங்கப்படும்

  ReplyDelete
  Replies
  1. ஏ நடுத்தெருவுல நிறுத்தவா

   Delete
 9. Announce new recruitment for pg asst Tntet due to increase of students admission in govt.schools

  ReplyDelete
 10. PGTRB exam la 40 question தப்பா கேள்வி கேட்டாங்க தப்பான கேள்வி கேட்டா govt job la irukanga exam eluthanavanga kovintha நீதிமன்றம் போன எல்லோருக்கும் தான் தப்பா கேட் டாங்கனு பதில் so யாருக்கும் extra mark I'lla sonnanga supar தீர்ப்பு நாடு இனி நாசமாய் தான் போகும்

  ReplyDelete
 11. 2013 tet selact anavangaluku govt குப்பை அல்லும் வேனலக்காவது தகுதி இருக்கா

  ReplyDelete
 12. 2013 TEt selact anavangaluku govt la குப்ப அல்லும் தகுதி யாவது இருக்கா

  ReplyDelete
 13. 2013 மற்றும் 2017 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை கொடுக்க துப்பில்லாத இந்த மானங்கெட்ட கையாலாகாத அரசு தனியார் பள்ளிகளில் வேலை இல்லாத ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி அமர்த்தும் திட்டம் தூ

  ReplyDelete
 14. Kindly give job for tet pass set 2013🙏🏻

  ReplyDelete
  Replies
  1. 100% உண்மை. தற்போது அரசுப்பள்ளியில் 10,00,000 மேல் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இப்போது தொகுப்பூதியத்தில் பணி எதற்காக கேட்க வேண்டும். அதுவும் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டுமா? இது போன்று சுயநலமாக சிந்திப்பதனால் தான் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் இப்படி சான்றிதழ் காலாவதி ஆகிவிடும் நிலைக்கு வந்து விட்டனர். பொதுநலம் கருதி நியாயமான முறையில் சிந்தித்தால் தான் வெற்றி கிடைக்கும்.

   Delete
 15. What about pg trb 2019 chemistry posting friends

  ReplyDelete
 16. டெட் pass ஆனவர்களுக்கு வேலை தராத இந்த அரசு இனி வரும் என கனவில் கூட நின்னைக்க முடியாது ,அம்மையார் ஜெயலலிதா அவர்கள் election வரும்போது எல்லாருக்கும் பணி வாய்ப்பு தருவார்கள்

  ReplyDelete
 17. Tet pass pannavangalku 7years posting podala, ithula private school teacher ku posting thararam namma amaichar

  ReplyDelete
  Replies
  1. Amaichar meedhu valakku pathivu seiya Erode il dsp idam Manu kuduka pattathu

   Delete
 18. A cash has been filed against minister sengottayan at Erode news flash

  ReplyDelete
 19. சான்று சரிபார்ப்பு முடித்த 2013 தகுதி தேர்வு நபர்களை தவிர வேறு யாரையும் எந்த அரசாலும் பணி நியமனம் செய்ய முடியாது 100% உண்மை

  ReplyDelete
 20. அதனால் தான் மாண்புமிகு அம்மா சான்று சரி பார்ப்பு நாடத்தினார் தயவு செய்து புரிந்து கொள்லவும்

  ReplyDelete
 21. சான்று சரிபார்ப்பு நடத்தியதல் தகுதி சான்று காலம் பணிநியமனம் வரை செல்லும் 100%

  ReplyDelete
  Replies
  1. Intha kosu yholla thanga mudiyalai

   Delete
  2. இந்த கொசு தொல்லை தாங்க முடியல.

   Delete
 22. 2013 தகுதி சான்று பணி நியமனம் வரை செல்லும் 100%

  ReplyDelete
 23. 2019 kadaisiya exam eluthunavanga than new sylabus la exam eluthunanga so 2019 only eligible for new posting

  ReplyDelete
 24. Ippadiyae ellorum sandai podaamal 2013,2017,2019 inainthu ketal palan kidaikum.velai kidaikatha varai anaivarin valiyum onruthan.

  ReplyDelete
 25. காலி பணியிடம் 2013 க்கு உட்பட்டதாகும்

  ReplyDelete
 26. No no only for 2019 2013 ku posting potachu pothum pothum next Mathavangaluku podatum

  ReplyDelete
 27. அம்மா அரசு ஏன் அம்மா தகுதியானவர்கள் என்று விட்டு சென்றவர்களுக்கு பணி வழங்கமல் உள்ளது

  ReplyDelete
 28. அம்மா என்பது எல்லாம் ...... ஒ

  ReplyDelete
 29. 2013, 2017, 2019 இல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். வாய்ப்பே இல்லை. ஏற்கனவே இருந்த வெயிட்டேஜ் முறையையும் அரசு ரத்து செய்துவிட்டு நியமன தேர்வு நடத்துவதற்கான அரசாணையையும் வெளியிட்டுவிட்டது. மேற்படி 2013, 2017, 2019 இல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதல்முறையாக நியமன தேர்வு வைத்து பணியமர்த்தலாம்.

  ReplyDelete
 30. Part time teachar first next tet ok

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கோரிக்கைகளை நீங்கள் அரசிடம் முன்வையுங்கள் அவர்கள் கோரிக்கையை அவர்கள் முன்வைக்கட்டும்... இதில் முன் என்ன பின் என்ன?

   Delete
 31. Ipdiyae sollikittaetha irukkinga but, posting tha poduvingalanu theriyala....🤔😖

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி