பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் அக்.19-ம் தேதி ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2020

பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் அக்.19-ம் தேதி ஆலோசனை



 தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் வரும் 19-ம் தேதி அன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்துகொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சில மாநிலங்கள், அக்.15-ம் தேதியில் இருந்து பள்ளிகளைத் திறந்துள்ளன. பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க ஆயத்தமாகி வருகின்றன.

இதற்கிடையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது. பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்தார்.

எனினும் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவ.11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (அக்.19-ம் தேதி) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலர், இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

21 comments:

  1. பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியம் இல்லை. இத சொல்லுறதுக்கு கூட்டம் வேற.அதான் எங்களுக்கே தெரியுமே

    ReplyDelete
  2. நீங்க பள்ளி திறக்கவே வேண்டாம் எங்களை விடுங்க நாங்க எப்படியோ மூட்டை தூக்கியாவது பிழைத்து கொள்கிறோம் என்ன வாத்தியாருக்கு படிச்ச தனாலே மூட்டை தூக்க கூட எவனும் கூப்பிடுகிறார் இல்லை படித்தது தப்பு என நினைக்க தோன்றும் அளவுக்கு இருக்கிறது பிழைப்பு

    ReplyDelete
  3. என்னத்த சொல்ல

    ReplyDelete
  4. இந்த கொரானாவில் கடுமையாக பாதிக்க பட்டவர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேற என்ன வேலை செய்தவனும் பிழைத்து கொண்டான் ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர் நிலைமை?._______________.

    ReplyDelete
  5. Higher secondary students ku class start panna try pannunga...

    ReplyDelete
    Replies
    1. Enda appa naanga manisanga kidayaada unakku first class start pannanum

      Delete
  6. காலேஜ் எப்ப திறப்பாங்க?

    ReplyDelete
  7. எத்தனை கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம். திறக்காத பள்ளிக்கு எதற்கு கூட்டம்

    ReplyDelete
  8. School open pannunga neraya private teachers vellai ilama kasta paduranga.

    ReplyDelete
  9. பத்து வருடமாக ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைக்காரன் காத்திருந்து கடைசியில் வயது வரம்பையும் காட்டி அவர்கள் வாழ்க்கையை நெருப்பில் போட்ட அதிமுக ஆட்சி இவர்கள் பாவம் உங்களை உங்களை சார்ந்த அத்தனை குடும்பமும் கூடிய விரைவில் மண்ணோடு மண்ணாக அழிவது உறுதி எத்தனை பேருடைய சாபம் உங்களை அழித்து விடும் உங்களுக்கெல்லாம் வயதுவரம்பு கிடையாதா நீங்க எல்லாம் சாகும்போது எதுக்குடா வருவீங்க வாழ்க்கையில் சால்ரா போட்டு பிழைப்பு நடத்தி முடிச்சிட்டியா இத்தனை பேர் ஆசிரியருடைய கனவுகளையும் தவிடுபொடியாக்கிய இந்த அதிமுக ஆட்சி கூடிய விரைவில் அழிந்து போகட்டும் இவர்கள் பாவம் உங்கள் அனைவரையும் ஒவ்வொரு மினிஸ்டர் அவன் குடும்பம் அத்தனையும் எங்கள் பாவம் உங்களை சுட்டெறிக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்கள்லாம் திருந்தவே மாட்டிங்க எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் உங்கள் ஆட்சி அத்தனையும் ஊழல் அரசு விதிமுறைகளை மாற்றி உங்களுக்கு தகுந்தாற்போல் மாற்றி ஆசிரியர் பணியிடங்களையும் ஊழலுக்கு விலை போகி இத்தனை பேர் வாழ்வாதாரத்தையும் இழக்கச் செய்த உங்களை இறைவன் மன்னிக்கவே மாட்டார்

    ReplyDelete
  10. அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே ஆசிரியர்களாக மதிக்கப்படுகிறார்கள்.பள்ளி திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதைக்கூற பல ஆயிரம் செலவழித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தும் அரசிற்கு தானியார் பள்ளி ஆசிரியர்களின் நிலமை எப்படிப்புரியும் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியரின் நிலை. MLA,MP,CM எல்லாருக்கும் ஒரு தகுதித்தேர்வு,அடிப்படை கல்வித்தகுதி அரை மாத சம்பளம் வாங்கிகுடும்பம் நடத்தி பார்த்தால் தான் தெரியும். சாத்தியக்கூறு இல்லை என்று கூறும் தகுதியற்ற அரசிற்கும்,தகுதிற்ற அமைச்சருக்கும்

    ReplyDelete
  11. நான் தனியார் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன்...சம்பளம் வாங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது.. எதற்காக படித்தேன் என நினைக்கும் அளவிற்கு வாழ்க்கை வெறுத்து விட்டது... தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் மனிதர்கள் தான்.ஏன்? அவர்களின் நிலமை பற்றி இதுவரை எந்த அமைச்சர்களும் கருத்து கூறவில்லை... நாங்களும் மனிதர்கள் தான்..எங்களும் பசிக்கும்..

    ReplyDelete
  12. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு தான் இந்த ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு,ஊக்க ஊதியம் ரத்து அரசு பணியிடங்கள் நிரப்பாமல் இருப்பது அரசு ஊழியர்கள் மீது வழக்கு etc........

    ReplyDelete
  13. 2012 tet தேர்வு முழுக்க முழுக்க fraud, திமுக ஆட்சிக்கு வந்த உடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி