டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 26 பேர் கைது. - kalviseithi

Oct 18, 2020

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 26 பேர் கைது.


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை கைது செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4; குரூப் - 2ஏ; வி.ஏ.ஓ., தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேட்டுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, இடைத்தரகர் ஜெயகுமார் உள்ளிட்ட, 51 பேரை, ஏற்கனவே கைது செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
தற்போது, விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, சென்னை எழும்பூரில் உள்ள, மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., சங்கர் தலைமையிலான போலீசார், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் 20 பேரை கைது செய்திருந்தனர்.இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. முறைகேடு தொடர்பாக மேலும் 40 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

4 comments:

 1. Ethumattumthan uzhala yella examum uzal entha mathiri oru keduketta aatchi yengaium nadakkathu...konchamkooda manasatchi ellatha ministernka neenga mattum unga kudumpam mattum nalla eruntha pothum yeven yeppadi pona yenna...

  ReplyDelete
 2. நாங்க TNPSC Boardஅ நம்பி படிச்சிக்கிட்டு இருக்கோம். இந்த மாதிரி எல்லாம் நடக்குதே இறைவா...
  ஏழை எளிய கடைசி நம்பிக்கை TNPSC EXAM...

  ReplyDelete
 3. படிப்புக்கு மரியாதை கிடைக்காது பணத்திற்கு தான் மரியாதை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி