5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு. - kalviseithi

Oct 29, 2020

5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.

 


தமிழக சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


சட்ட பல்கலையின் பொறுப்பு பதிவாளர் ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில் இணைப்பில் உள்ள, 14 சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பில், 1,651 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இதற்கு, ஆக., 5 முதல், செப்., 4 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம், 11 ஆயிரத்து, 219 பேர் விண்ணப்பித்தனர். 


அவர்களில், 10 ஆயிரத்து, 858 பேர் தகுதி பெற்றனர்.விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மாணவர்களுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண், தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.'கட் - ஆப்' மதிப்பெண்ணை பொறுத்தவரை, பழங்குடியினருக்கு, 62.500; அருந்ததியினருக்கு, 74.750; ஆதி திராவிடருக்கு, 76.750; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு, 78.125; பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லிம்களுக்கு, 79.500; பிற்படுத்தப்பட்டோருக்கு, 79.250 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அரசின் உத்தரவுப்படி, மொத்த இடங்களில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, ௪ சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு, 86.375 சதவீதம், 'கட் - ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, வரும், 4ம் தேதி முதல், 6ம் தேதி வரை, 'ஆன்லைன்' வழியே கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.மாணவர்கள், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், தங்கள் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தரவரிசையை தெரிந்து கொள்ளலாம்.ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இ- - மெயில்' வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி