குளச்சல் - சிக்கிய வட்டார கல்வி அலுவலர்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2020

குளச்சல் - சிக்கிய வட்டார கல்வி அலுவலர்...

 


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் இருக்கின்றன. மேலும், ஒன்பது வட்டாரக் கல்வி அலுவலகங்கள் இருக்கின்றன. வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூலம் தமிழக அரசின் இலவசப் பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுவருகின்றன.


குளச்சலிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடப் புத்தகங்களை அரசுப் பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவில்லை என்றும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு கமிஷன் அடிப்படையில் புத்தகங்களை விற்பதாகவும் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.


இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீஸார், குளச்சல் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வட்டாரக் கல்வி அலுவலரான ஜெயராஜ் இருந்தார். வட்டாரக் கல்வி அலுவலரான ஜெயராஜ், தக்கலை அருகே அழகியமண்டபம், வியன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்.

சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.54,060 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், அங்கிருந்த ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ஆறு மணி நேரத்துக்கும் மேல் நீண்டது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், துறைரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி