பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று பதிவேட்டில் பராமரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2020

பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று பதிவேட்டில் பராமரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.



தேசிய பகமைத் தீர்ப்பாயத்தில் திரு.ஸ்ரீகாந்த் கடே என்பாரால் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும் , அதனை பராமரிக்கவும் பார்வை 3 ல் காண் 16.03.2019 நாளிட்ட செயல்முறைகளின் வாயிலாக தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது 2019-2020 ஆம் கல்வியாண்டு முடிவுற்ற நிலையில் , மாணவர்கள் புதிய புத்தகம் பெறுவதற்காக பள்ளி வளாகம் வருகை தருகையில் பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று , வகுப்பு மற்றும் பாடவாரியாகத் தொகுத்து பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிடவும் , பயன்படுத்த முடியாத புத்தங்களை பெற்று இருப்பு வைத்திடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மேலும் இது சார்ந்த பதிவேட்டினை பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3 comments:

  1. இந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. Kadaisi varaikum katharite iru. Competition is there everywhere. We can not seniority. Lacks of intelligent people are waiting to grab job. If u r not able, shut the fuk up....

      Delete
  2. Its my opinion just read out
    Government yearly free books kudukuratha
    Two yearsku oncenu kudutha budgetla thundu vilathula
    For example
    2021to 2022 ku book kuduthutu again 2023to 2024 kudukalamae
    Oru student next academic year 6th na 7th poracha old books vanki padikatum
    Except 1,6,9,11standard
    Yenna newa sera children vera scl or transferla vera district lernthu vantha avankaluku konjam useful ah irukalamla

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி