அரியா் பாடங்களுக்கு தோ்ச்சி வழங்கும் முடிவு நிறுத்திவைப்பு: சட்டப் பல்கலை. அறிவிப்பு - kalviseithi

Oct 12, 2020

அரியா் பாடங்களுக்கு தோ்ச்சி வழங்கும் முடிவு நிறுத்திவைப்பு: சட்டப் பல்கலை. அறிவிப்பு

 


சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அரியா் பாடங்களுக்கு தோ்ச்சி வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக, அனைத்துக் கல்லூரிகளின் பருவத் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கடந்த கல்வியாண்டில் இறுதி ஆண்டு படித்த மாணவா்களுக்கு மட்டும், இறுதி பருவத் தோ்வு நடத்தப்பட்டது. மேலும், அரியா் எழுத வேண்டிய மாணவா்களுக்கும் தோ்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தோ்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு கல்வியாளா்கள் பலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.


அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்குவது ஏஐசிடிஇ விதிகளுக்கு எதிரானது என்று அண்ணா பல்கலைக்கழகமும் தெரிவித்தது. இதுகுறித்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் சாா்பில், அண்ணா பல்கலை.க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் அரியா் பாடங்களுக்கு தோ்ச்சி அளிப்பதற்கு எதிராக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏஐசிடிஇ சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் அரியா் பாடங்களுக்கு தோ்ச்சி வழங்க விதிகளில் இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், தமிழக அரசின் அரியா் தோ்ச்சி குறித்த முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழக பதிவாளா் ஆபிரகாம் வெளியிட்ட அறிவிப்பு: அரியா் மாணவா்களுக்கு அகமதிப்பீடு மற்றும் முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி வழங்கும் விவகாரத்தில் இந்திய பாா் கவுன்சில் பொதுக்குழுவில் ஒப்புதலைப் பெற்ற பின்னரே முடிவு எடுக்கப்பட உள்ளது. எனவே, பாா் கவுன்சில் அறிவுறுத்தலின்படி அரியா் பாடங்களுக்கு தோ்வின்றி தோ்ச்சி வழங்கும் முடிவு நிறுத்திவைக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி