சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு - சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2020

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு - சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

 


ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் இன்று நடந்தன 

 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இவற்றில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை வழக்கம்போல மே மாத இறுதியில் நடத்த யுபிஎஸ்சி திட்டமிட்டிருந்தது. 

 

ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் வெற்றி பெறுவோருக்கான பிரதான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

கொரோனா பரவலைத் தடுக்க தேர்வர்கள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை என 2 கட்டங்களாக தேர்வு நடைபெற்றது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி