சத்துணவுத் திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்திவைப்பு ஏன்? அமைச்சர் வெ.சரோஜா விளக்கம். - kalviseithi

Oct 9, 2020

சத்துணவுத் திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்திவைப்பு ஏன்? அமைச்சர் வெ.சரோஜா விளக்கம்.கரோனா தொற்று தடுப்பு பணிகள் நடந்து வருவதால் சத்துணவு திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அமைச்சர் இதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 5,411 சத்துணவு அமைபப்பாளர்கள், 2,459 சமையலர்கள், 8,326 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ள அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இதனையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், சத்துணவு வேலை வாய்ப்பிற்கு அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது கரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் அதிக கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு சத்துணவு பணியாளர்கள் தேர்வு செய்யும் பணியை பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா குறிப்பிட்டார்.6 comments:

 1. இந்த பணியை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் கொடுக்கலாமே........வயதானவர்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்குமே....

  ReplyDelete
 2. அப்டிலாம் கொடுக்க மாட்டாங்க
  170 கோடி........

  ReplyDelete
 3. பணம் வாங்குறதுக்கு..... லஞ்சத்தின் உச்சம் இந்த ஆட்சி

  ReplyDelete
 4. இந்த அதிமுக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் பணி நியமனத் தடைச் சட்டம் இயற்றி 5 வருடத்தைக் கடத்துவார்கள். வாழ்வில் படித்தவர்களுக்கு 5 வருடங்கள் இவர்களால் வீணாகிவிடும் ஒவ்வொருமுறையும். தற்போது பத்தாண்டுகளாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டுவராமல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்தார்கள். இப்படி குறைக்கும் போது ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரும்பாலும் உயர்த்தும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வயதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது வயதை 40 என்று நியமிக்கும் போது 30 வயதில் இவர்களின் ஆட்சி ஆரம்பம். தற்போது பத்தாண்டு கடந்து 40 வயது ஆனதும் இவர்களின் ஆட்சியில் தான். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அப்படியே பணியிடங்கள் அறிவித்தாலும் அவற்றில் குளறுபடி செய்து வழக்குப் பதியச் செய்து அந்த பணியினை நிறுத்தி வைத்துவிடுவார்கள். எங்கும் தொகுப்பூதியம் என்று கொண்டுவந்து கொத்தடிமைகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். படித்தவர்கள் சிந்தித்து உணரவேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி