கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டும் என விருப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2020

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டும் என விருப்பம்.



புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

உயர்கல்வித்துறை சார்பில் புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென்று தெரிவித்தாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதே போன்று, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைத்தேர்வு வேண்டாம் என்றும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைச் செயலாளர் சண்முகம், மத்திய கல்வித்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

3 comments:

  1. பொய் பிராசரத்திற்கு பலியாகும்
    தமிழக ஏழை கிராம மாணவர்களின்
    எதிர்காலம் தேசபிதாவிற்கு தமிழ் உட்பட பல மொழி அறிவு கொண்டு இருந்தார்
    நம் ஏழை மாணவர்கள் பன்மொழி புலமையை பெறுவதை ஏன் தடுக்கிது
    சுயநலம் அரசு உயர்அதிகாரிகள் பிள்ளைகளும் அரசியல் வாதிகளின் வாரிசுகளும் பன்மொழி பயிற்றுவிக்கும்
    பள்ளிளில் பணத்தை கட்டி பன்மொழி
    புலமை வளர்ந்து கொள்கிறார்கள்
    கிராமத்து ஓலை குடிசையில் வாழும்
    மாணவனின் குரல் ஏமாறாதே!

    ReplyDelete
  2. NEET க்கு கருத்து ஏன் அனுப்பவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி