மாணவர்களுக்கு யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2020

மாணவர்களுக்கு யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

 

ஆன்லைன் வகுப்புகளுக்கு முன்பு யோகா பயிற்சிகளை செய்ய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.கொரோனா பாதிப்பு காரணமாக, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டிலிருந்து வகுப்புகளை தொலைக்காட்சிகள் மூலமும், ஆன்லைனிலும் கவனித்து வருகின்றனர். 


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,2 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளையும் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். தொலைக்காட்சி மூலம் பாடம் படித்தாலும், அவை மனதில் பதிந்துள்ளதை கண்காணிக்க, ஆசிரியர்கள் மீண்டும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகள் மூலம், அவர்களுக்கான பயிற்சி வழங்குகின்றனர்.


யோகா பயிற்றுனர்கள் கூறுகையில், 'மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கும்போது, நாள்தோறும் சிறிய யோகா பயிற்சிகளுடன் துவங்க வேண்டும். இதற்கு ஆசிரியர்களும் தயாராக இருந்தால் மட்டுமே மாணவர்களிடம் சாத்தியமாகும். 


கண்களை புத்துணர்ச்சியாக்குவதற்கு, சிந்தனையை ஒரு நிலையில் நிறுத்துவதற்கு, அழுத்தமில்லாமல் படிப்பதற்கு என யோகா கட்டாயம் தேவையாக உள்ளது. ஆசிரியர்கள் இதை செய்தால், பாடம் படிப்பதில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிப்பதோடு, அவர்களின் உடல்நலம் பாதுகாப்போடு இருக்கும்,' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி