மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்த தகவல்களை பதிவிடக் கூடாது என உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2020

மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்த தகவல்களை பதிவிடக் கூடாது என உத்தரவு.

 


ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டில் பெண்கள் பெயர்களை சிவப்பு மையாலும், ஆண்கள் பெயர்களை ஊதா மையாலும் எழுதும் வழக்கமாக உள்ளது. அதேபோல் வருகை பதிவேட்டில் மாணவ, மாணவியரின் பெயர்களுடன் ஜாதி மற்றும் மதத்தை எழுதும் வழக்கமும் உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில அரசு,   பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இதில் மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்த தகவல்களை பதிவிடக் கூடாது என்றும், வருகை பதிவேட்டில் பெண்கள் பெயர்களை சிவப்பு மையால் எழுதக்கூடாது என்றும் அனைவரும் சமமே என்ற கோட்பாடு இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார். ஆந்திரா மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

4 comments:

  1. பிற‌ப்பின் அடிப்ப‌டையில் அனைவ‌ரும் ச‌ம‌ம்...என‌வே வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌ முடிவு...ஆனால் 'ஜெக‌ன் மோக‌ன் ரெட்டி','ச‌ந்திர‌பாபுநாயுடு' என‌ உங்க‌ள் பின்னால் இருப்ப‌து ச‌ற்று உறுத்த‌லாக‌வே உள்ள‌து..

    ReplyDelete
  2. TN நாட்டில் அப்படி செய்ய விடமாட்டாங்க,இங்கு உள்ள அனைத்து கட்சிகளும் சாதி , மதம் வைத்து தான் அரசியல்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி