வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2020

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?

 


வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, முக்கிய கோவில்களில், கட்டணமில்லாத சிறப்பு தரிசனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது.


தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், எட்டு பேர் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின், முதல் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று, சென்னை, அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ், மகளிர் அணி செயலர் கனிமொழி, கொள்கை பரப்பு செயலர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் விவாதித்தது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: குடும்பத்தில், படித்த ஒருவருக்கு, அரசு வேலை, போலீசாருக்கு வார விடுமுறை, அரசு மருத்துவமனைகளில் உயர் தரமான சிகிச்சை, பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு ஆகிய அறிவிப்புகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம். ஏரி, குளங்களை துார்வரும் திட்டம், பராமரிக்கும் திட்டம், கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான திட்டம் ஆகியவை குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு கட்டணமில்லாமல் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிப்பது, கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது, கனிம வளங்கள், ஆற்று மணல் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இவையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம். மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது, பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யும்போது, பதிவுக் கட்டணம், 50 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்தும், குழுவினர் ஆலோசித்துள்ளனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


கூட்டம் முடிந்த பின், தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை: வரும், 2021ல் நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை ஒட்டி, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்கு, டி.ஆர்.பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது.தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்தும், தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும், நேரில் அல்லது அஞ்சல் வாயிலாக, கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அனுப்பி வைக்கலாம். அத்துடன் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க விரும்புவோர், manifesto2021@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

38 comments:

  1. ௮ப்டியாவது ௭ங்கள் குடும்பத்தை முன்னேற்றம் செய்திடுங்கள். வாழ்த்துக்கள்🎉🎊

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.

      Delete
  2. ௮ப்டியாவது ௭ங்களுக்கு விடிவு பிறக்கட்டும். குடும்பத்தில் ஒ௫வ௫க்கு ௮ரசு வேலை.

    ReplyDelete
  3. வரவேற்கத்தக்கது
    ...... இதன் மூலம் அனைவரது குடும்பமும் முன்னேற்றம் அடையும்...நிறைவேற்றினால் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. நாடு நாசமானாலும் பரவாயில்ல

      Delete
    2. வரவேற்கத்தக்கது
      ...... இதன் மூலம் அனைவரது குடும்பமும் முன்னேற்றம் அடையும்...நிறைவேற்றினால் மிக்க மகிழ்ச்சி...

      Delete
  4. விவசாயத்தையும் ,தமிழ் மொழியையும் மேம் படுத்துங்கள்

    ReplyDelete
  5. S government job kodunga

    ReplyDelete
  6. விவசாயிகளை மறந்துட்டீங்க

    ReplyDelete
  7. Evarkal aachyla erukkumpothu kodutha velai vayippukal evla?

    ReplyDelete
  8. Giving a government job to someone in the family is a good decision 👍 👍

    ReplyDelete
  9. தேர்தல் அறிக்கையில் ஆசிரியப் பணி நியமன வயதுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் ஐயா

    ReplyDelete
  10. Apadina nan kandipa ungalaku vottu poduven sir

    ReplyDelete
  11. Cps தாரர்களுக்கு ஓய்வூதியம் மறந்திடாதிங்க ஐயா

    ReplyDelete
  12. My vote for you only sir but i need a government job

    ReplyDelete
  13. தமிழகத்தின் தற்போதைய நிலைமைக்கு ஆதி காரணம் - பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் உள்ளது..

    ReplyDelete
    Replies
    1. நாடு நாசமானாலும் பரவால்ல நம்ம நல்லாருந்தா போதும் நெனக்காக நாட்டை நிர்முலமாக்கிய விஷ கிருமி திமுக

      Delete
    2. இப்ப ஆண்டுகொண்டிருக்கும் அரசு நாசம் பன்னாம நல்லாவச்சிருக்கா சார்? இந்த ஆளும் அரசு படு மோசம்

      Delete
  14. Veetirku oruvarukku valal itthu admk in 2016 arivuppu. Athuthan nallava koduthurakangala!

    ReplyDelete
  15. இதுவரை எத்தனை ஆண்டு தமிழ்நாட்டில் தான் ஆட்சித் செய்தீர்கள் இதை நிறைவேற்றி இருக்க கூடாதா?

    ReplyDelete
  16. வீட்டிற்கு ஓர் அரசுவேவலை
    நல்ல திட்டம்
    நாட்டிலேயே அருமையான திட்டம்
    திமுக ஆட்சி அமையும் 21

    ReplyDelete
  17. மொத்தம் 1,97,82,593 இவ்வளவு (ரேஷன் கார்டு) குடும்பம் இருக்கு... கவர்மெண்ட் ஜாப் இருக்கவங்க வயசானவங்க இவங்க எல்லாம் 1 கோடி குடும்பம் என்று வைத்துக் கொண்டால்கூட மீதி இருக்கும் 50000 (தோராயமா) வேலை போட முடியுமா.. முடிந்தால் மகிழ்ச்சியே...

    ReplyDelete
  18. Yes, each family must need atleast one G.job .lt is possible when ever family has atmost one job like Delhi
    Gov.

    ReplyDelete
  19. தேர்தலின் போது சொல்றதுதான்
    ஜெயிச்சி வந்ததுக்குஅப்புறம்.. எல்லாம்
    கானல் நீர் தான்.. குடும்பத்தில் முதல்
    பட்டதாரிக்கு முன்னுரிமை என்ன ஆச்சு.. employment இழுத்து மூடியாச்சு
    ஏழைகள் ஏழைகளாகத்தான்இருக்கிறார்கள்..பணம்
    படைத்தவர்க்கே அரசு வேலை.. இது தான் இன்றைய நிலை.ஓட்டு வாங்கி ஜெயிச்ச பின்னர்..எல்லாமே மறந்து போகும்.. பல குடும்பங்கள் பசியாலே இறந்து போகும்.. சீனியாரிட்டி மூலம் வேலை கொடுத்திருந்தாலே.. பல குடும்பங்கள்personality யாய்.வாழ்ந்திருக்கும்இங்கே..குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை எப்படி வழங்குவீர்.. வாக்குறுதி வழங்கும் முன்னர் வடிவமைப்பு முதலில் வேணும்
    வழங்கினால் வாக்கு நிச்சயம்..

    ReplyDelete
  20. இந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.

    ReplyDelete
  21. 2012ம்ஆண்டுபகுதிநேர ஆசிரியர்கள் ஆக ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத பலருக்கு இடைத் தரகர்கள் மூலம் பணத்தை வாங்கி கொண்டு பணி நியமன ஆணை வழங்கி அரசு பள்ளிகளில் பணியாற்றும் அந்த தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்ய தி.மு.க.தேர்தல் அறிக்கையில் வர வேண்டும் என்று தகுதி உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

    ReplyDelete
  22. Better close down employment exchange.. Money is wasted there

    ReplyDelete
  23. Super.each family must need atleaat one g.job.

    ReplyDelete
  24. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மிகச்சிறப்பாாானது ,வரவேற்கதக்கது

    ReplyDelete
  25. டீச்சர் ஓட்டு 15 லட்சம் பேர் தி மு க

    ReplyDelete
  26. Ellarukum sweeper, kakkoos kaluvura velaiya irukum.... Ana elarum avanga veetukullaye pannanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி