அரசு பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் திடீர் சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2020

அரசு பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் திடீர் சரிபார்ப்பு.

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்கு நர்களின் பணிநியமன ஆணை மற்றும் கல்விச்சான்றிதழ்கள் திடீரென சரிபார்க்கப்பட்டு வருகிறது ) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்ட அள்ளி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் , ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ராஜேந்திரன். இவர் , பத்தாம் வகுப்பு படிக்காமலேயே , போலி சான்றிதழ் கொடுத்து 21 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தது சமீபத்தில் கண்டுபிடிக் கப்பட்டது. இதே போல் , மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அவ்வப்போது குற்றச் சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனையடுத்து , தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 , சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப , பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.



10 comments:

  1. இந்த நடவடிக்கை,
    வரவேற்க வேண்டிய
    ஒன்று,
    பலரும் இவ்வாறே பணியில்,
    சேர்ந்து,
    ...தகுதியான நபர்களின் வேலை வாய்ப்பை பறித்து
    வேதனை குழியில் தள்ளி
    வெறுமை ஆக்கி உள்ளனர்,
    ...

    ReplyDelete
  2. இதுக்கு ஆசிரியர் சங்கம் கண்டணம் தெரிவிக்குமே, அப்புறம் எங்களை பணி செய்ய விடாமல் அலைகழிக்கும் பள்ளிகல்வி துறை அப்படினு போராட்டம் நடத்துவாங்க

    ReplyDelete
  3. Please see the details of VVM National science Talent Exam 2020 in the YouTube channel SRIHARI TIMES

    ReplyDelete
    Replies
    1. Yes not in state also central government employees do the same... Some people give community certificate in the crt manner but they belongs to higher category

      Delete
  4. Some persons give the Community certificate also wrong

    ReplyDelete
    Replies
    1. Unknown
      October 23, 2020 at 11:53 AM
      Yes not in state also central government employees do the same... Some people give community certificate in the crt manner but they belongs to higher category

      Delete
  5. மற்ற எல்லா ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் மற்றும் பிற மாநிலத்தவர் அல்லாதவர்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.. ஏனெனில் பிற மாநிலத்தவர் கூட போலியான இருப்பிட சான்று கொடுத்து .. தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்தள்ளனர்.இதையெல்லாம் கண்டு கொள்ளாத அரசு .. ரேசன் கார்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து மண்ணில் பிறந்தவர்களுக்கு வேலை தராமல்..அண்டை மாநிலத்தவர் தமிழர்களின் வேலையை பறிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது... ஒரு நாள் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.தமிழ் மண்ணில் பிறந்தவர்களுக்கு அண்டை மாநிலத்தில் வேலை வாங்க முடியுமா.ஆனால் இங்கே லஞ்சம் கொடுத்து இருப்பிட சான்று வாங்கி பலர் தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ளனர்.வேலைவாய்ப்பையும் ஒரே ரேசன் ஒரே கார்டு போல மாற்றி விட முடியுமா அரசியல் தலைவர்களே... சொந்த மாநிலத்தவர்களுக்குத்தான் ..
    வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறீர்களா என்பதை முதலில் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.. பிறகு கல்விச் சான்றிதழ் ஆய்வை பார்ப்போம்.

    ReplyDelete
  6. போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆசிரியர்கள் சங்கம் என்றும் துணை நிற்காது.ஆசு+இரியர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி