இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி - kalviseithi

Oct 29, 2020

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி

 


இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில், இறுதி பருவ தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக மானியக்குழு, இறுதிப்பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளது.


செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதி பருவத் தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்க கோரலாம் என்றும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இறுதி(6 வது) பருவ தேர்வு எழுதியவர்கள் அதில் pass ஆகிட்டா 1முதல் (5வாது)பருவ தேர்வில் அரியர் இருந்தால் பாசா?.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி