தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: அமைச்சர் இன்று ஆலோசனைக் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: அமைச்சர் இன்று ஆலோசனைக் கூட்டம்

 


தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தோ்வுகளைத் தள்ளிவைப்பது போன்ற விஷயங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா்.


தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்குவது, பொதுத்தோ்வுகளை ஒத்திவைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து துறைச் செயலா், இயக்குநா்களுடன் அமைச்சா் செங்கோட்டையன் சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.


இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டால், மாணவா்களுக்கு சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற போதுமான இடவசதிகள், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகளையும் ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

16 comments:

  1. Replies
    1. KSJ GUIDES
      For the standard of X, XI, XII.

      Contact
      9944991847
      9865315131
      9944488077

      Delete
    2. ST.XAVIER'S ACADEMY,
      NAGERCOIL, CELL:8012381919.
      TNEB Accountant- Online class
      STUDY MATERIALS AVAILABLE.
      1. Unit wise study material
      2. Concept wise explanation
      3. Multiple choice questions
      4. Answer with explanation
      5. Total 1046 pages

      Delete
  2. Sorry friends private schools la last seven months ah no salary athuku oru
    Action government edutha paravala

    ReplyDelete
  3. பள்ளிகளை திறப்பதற்கான சூழல் தற்போது இல்லை. அப்படின்னு தானே சொல்ல போற நாயே....

    ReplyDelete
  4. பள்ளி திறப்பதாக இருந்தா ஆலோசனை பண்ணுங்க

    ReplyDelete
  5. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை


    கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
    ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
    மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
    அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
    பணி வழங்கப்பட்டது. இதனால், 25
    ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
    ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
    டைந்தனர். இவர்களில் பலர், வயது
    மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
    அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
    னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
    TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    எழுந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Compatative exam vachi thaan posting poduvanga...

      Delete
    2. TRB Board atleast competitive exam syllabus aavathu sollunga

      Delete
  6. January thaan reopen pannuvaangal

    ReplyDelete
  7. 2017,2019 posting podala ,ethum theryatha solathinga unknown sir

    ReplyDelete
  8. V have to feel proud ourself having such educational minister . Hats off 2 u sir

    ReplyDelete
  9. V r expecting u in following days as a educational minister always. Then only our tamilnadu will be always great

    ReplyDelete
  10. Polytechnic exam when possible?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி