அரசு பணியிடங்களுக்கு நேர் காணல் நியமனம் ரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2020

அரசு பணியிடங்களுக்கு நேர் காணல் நியமனம் ரத்து.


பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க 23 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள்அரசு பணிக்கான நேர்காணலை ரத்து செய்துள்ளது என மத்தியஅமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி கடந்த 2015 ம் ஆண்டில் சுதந்திர தின உரையின் போது மத்திய அரசு பணிகளில் குரூப் பி (நான் கெஸடட்) மற்றும் குரூப் சி பிரிவுகளில் நேர்காணல் கூடாது. அதற்கு பதிலாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யலாம் என கூறி இருந்தார். மேலும் கடந்த காலங்களில் நேர்காணலின் போது நிகழ்ந்த குற்றங்கள் மற்றும் புகார்கள் ஏராளமாக இருந்தது. அதுமட்டுமல்லாது வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பணத்தை பெற்றுக்கொண்டு சலுகை காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.


நேர்காணலை ரத்து செய்வதோடு எழுத்து தேர்வு நடத்துவதன் மூலம் அனைவருக்கும் சம அளவிலான வாய்ப்பு வழங்கப்படும். என அமைச்சர் கூறினார்.


குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பிரதமரின் இந்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்தின. அதே நேரத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவை அமல்படுத்த தயங்கின. தற்போதைய நிலையில் ஜம்முகாஷ்மீர் , லடாக் உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்களில் 23 மாநிலங்கள் வரையில் நேர்காணல் நடைமுறையை நிறுத்தி உள்ளது. இது திருப்தி அளிப்பதாக உள்ளது என அமைச்சர் கூறினார்.



18 comments:

  1. Tnpsc க்கு பொருந்துமா?

    ReplyDelete
  2. ஆமா. எழுத்து தேர்வு மட்டும் இங்கே நியாயமா நடக்குதாக்கும். அங்கேயும் பணம் இருக்கவனுக்கு தான்டா வேலை குடுக்குறானா... சாரி வேலை வாங்குறான்

    ReplyDelete
  3. எழுத்து தேர்வில் தான் அதிகப்படியான ஊழல் நடைபெறுகிறது.சரியான முறை சீனீயாரட்டி வைத்து பணி வழங்கினால் இதுபோன்று ஊழல் நடைபெறாது.

    ReplyDelete
  4. கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு ph.d வைத்திருப்போர் தகுதி தேர்வு (நெட், செட்) தேர்ச்சி பெற தேவை இல்லை. அதன் பின்னர் போட்டி தேர்வும் எழுத தேவை இல்லை. வெறுமனே பணி அனுபவம் மற்றும் நேர்காணல் (interview) மூலம் பணி நியமனம் பெற முடியும். பள்ளி ஆசிரியருக்கு தான் தகுதி தேர்வு தேர்ச்சி ( அதுவும் 7 ஆண்டுக்கு மட்டும்) பின் போட்டி தேர்வு.... அரசு ஆசிரியர் பணிகளுக்கு என்ன கொள்கை பின்பற்றி வருகிறார்கள் என யாருக்கும் புரியவில்லை. ஆந்திர அரசு எந்த பதவிக்கும் போட்டி தேர்வு மட்டும் என அறிவித்து நேர்காணல் கிடையாது என அறிவித்து உள்ளது. அப்படி பார்த்தால் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்து வழி காட்ட வேண்டியவர்கள் அவர்களுக்கு தகுதி தேர்வு போட்டி தேர்வு தேவை இல்லை என்கிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என ஆணை வருவதற்கு முன்பே பணி நியமனம் பெற்றோர் தகுதி தேர்வு பெற வேண்டும் என்ற விதியும் பள்ளி ஆசிரியர்களுக்கு தலை விதி தான்.

    ReplyDelete
    Replies
    1. பாதி பேர் பணம் கொடுத்து தான் phd வாங்குகிறார்கள்.அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது... அப்படி இருக்கும் போது கண்டிப்பாக அவர்களுக்கும் தேர்வு வைத்தே பணி வழங்க வேண்டும்...

      Delete
  5. கல்லூரி பேராசிரியர் பணிக்கு p.hd முடித்தால் அவர்களுக்கு எந்த ஒரு தகுதி தேர்வும் கிடையாது.பணி அனுபவம்இருந்தால போதும் அவர்களுக்கு பணி...ஆனால் 1லிருந்து12ஆம் வகுப்பு ஆசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.இவர்களைவிட விட கல்லூரி பேராசிரியர் பணிக்கு தான் நியமன தேர்வு வைக்க வேண்டும்.என்ன அரசாங்கம் இத?

    ReplyDelete
  6. P.hd எப்படி முடித்து வருகிறார்கள்?

    ReplyDelete
  7. p.hd முடித்தவர்களுக்கும் பணி நியமன தேர்வு வைக்கவேண்டும்.இதுதான் சரியான முறை...

    ReplyDelete
  8. College professor appointment must NET only write way

    ReplyDelete
  9. பணம் கொடுத்தால் p.hd பட்டம்...அப்படி இருக்க... அவர்களுக்கும் பணிக்கான தேர்வு வைக்கவேண்டும் அப்படி வைத்து பணி வழங்கினால் கல்லூரிகளில் கல்வி தரம் சிறக்கும்...இதுதான் சிறந்த முறை.

    ReplyDelete
  10. 1. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete
  11. நான் M.sc, M.ed. Age 46 இனி அக்கா பெண்ணு வயசுக்கு வந்த என்னா வராட்டி என்னா?..…..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நீதி கிடைக்கும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருங்கள்👍👍👍

      Delete
  12. கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கும் எழத்துத்தேர்வு மூலம் வைத்தே பணியிடம் நிரப்ப வேண்டும். இந்த அரசின் காதில் விழுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  13. Teachers age eligible 40yrs Ena da mutualthanma irku.profisonal course kue evan da age eligible kondruvan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி