பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் எப்போது திறக்கலாம் ? முதல்வர் இன்று ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2020

பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் எப்போது திறக்கலாம் ? முதல்வர் இன்று ஆலோசனை!

 


பொது முடக்கத்தில் மேலும் தளா்வுகளை அளிப்பது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.


முதலில் மாவட்ட ஆட்சியா்களுடனும், இதன்பின்பு மருத்துவ நிபுணா்களுடனும் அவா் ஆலோசிக்க உள்ளாா்.


தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவது, கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்ற பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.


அதேசமயம், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியன தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மருத்துவ நிபுணா்களுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி விவாதிப்பாா் எனத் தெரிகிறது.


மேலும், பண்டிகைக் காலங்களில் பொது மக்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்வதை வலியுறுத்துவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசிக்கவுள்ளாா். பண்டிகைக் காலங்களுக்கு முன்பாக தளா்வுகளை அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் என்பதால் புதன்கிழமை நடக்கவுள்ள கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

10 comments:

  1. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது எதுவும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.இது ஒன்றும் புதிதல்ல.

    ReplyDelete
  2. PG-TRB Coaching Center in Krishnagiri
    Admission going on
    9489147969
    9489145878
    Online Test series-2020
    Classes starting soon...

    ReplyDelete
    Replies
    1. தேர்வு வராது 100℅௨ண்மை

      Delete
    2. இல்ல சார் தேர்வு கண்டிப்பா இந்த வருஷம் உண்டு சார்

      Delete
    3. யார் சொன்னது ௨ங்களுக்கு? நேரில் சென்று விசாாித்தவர்களுக்கு வராது என்று தெரிவித்தாா்களாம்

      Delete
    4. ஒ௫ தேர்வேஇன்னும்முடியல ௮ப்ப௭ப்படி ௮டுத்த தேர்வு வ௫ம்?

      Delete
  3. சம்பாதிக்க ௭துவேன்டுமானாலும் சொல்வாா்கள்சிலர் 100℅தேர்வு வராது இதுதான் உன்மை

    ReplyDelete
  4. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் , போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் கண்டிப்பாக வரும்.

    ReplyDelete
  5. நிச்சயம் தேர்வு வராது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி