டாக்டா் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சாா்பில் சாதனையாளா் விருது - kalviseithi

Oct 19, 2020

டாக்டா் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சாா்பில் சாதனையாளா் விருது இளைஞா்களின் எழுச்சி நாயகன் டாக்டா் அப்துல்கலாம் பிறந்தநாளில் தேனி மாவட்டத்தில் கொரணா பேரிடா் காலத்தில் தொடா்ந்து சமூக சேவை செய்து வருகின்றவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் *தேனிமாவட்ட வருவாய் அலுவலா் மதிப்புமிகு திரு.க.ரமேஷ்* அவா்களின் தலையில் " *சாதனையாளா் விருது"* வழங்கும் நிகழ்வு 15.10.2020 இன்று மாலை 4.00 மணியளவில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கல்வித்துறையில் நோ்மையாக பணியாற்றிக்கொண்டுள்ள தேனிமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் மதிப்புமிகு *திரு.க.பாலதண்டாயுதபாணி அவா்களுக்கும்,  பொதுமக்களுக்கு காவல் அரணாகவும், நோ்மையாகவும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டுள்ள போடி தாலுகா காவல் ஆய்வாளா் மதிப்புமிகு 
திரு V.தா்மா் அவா்களுக்கும் தேனி நாடாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை
 திருமதி  அமிா்தா அவா்களுக்கும், தன்னாா்வலா்
திரு செல்வகுமாா் அவா்களுக்கும்,
அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று தேசிய அளவில் நடந்த IIT-JEE(Advanced) தோ்வில் தோ்ச்சி பெற்று தேனிமாவட்டத்திற்கு பெருமை சோ்த்த வடுகபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவா் தட்சிணாமூா்த்தி க்கும் "சாதணையாளா் விருது பெற்றவா்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி