ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2020

ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்!



ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கி ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டியது ஒரு அரசின் கடமை மாறாக நடைமுறையில் இருந்து வரும் முன் ஊதிய உயர்வு ( Advance increment ) மற்றும் ஊக்க ஊதியத்தை ( Incentive ) நிறுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கும் போது ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்று அவர்களது அறிவாற்றலை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கி ஆணை ( அரசாணை எண் : 42 நாள் : 10.01.1969 ) பிறப்பித்தார். ஆனால் இன்றைக்கு தமிழக அரசு அவரது கொள்கைக்கு எதிராக வெளியிட்டுள்ள அரசாணைகள் : 37 , நாள் : 10.3.20 மற்றும் 116 , நாள் : 15.10.2020 ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்துகிறோம் . அரசாணை எண் : 37 , நாள் : 10.3.2020 - க்கு தெளிவுரைகள் வழங்கிடுவதற்காக அரசாணை : 116 நாள் : 15.10.20 வெளிவந்துள்ளது. 


அரசாணை : 37 , நாள் : 10.3.20 - ன் படி அரசு ஊழியர்களுக்கு முன் ஊதிய உயர் ( advance increments ) இனி வரும் காலங்களில் இல்லை என்பதாக இருந்தது சில கருவூலத்துறை அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியமும் ( Incentive ) இல்லை என்பதாக மறுத்த நிலையில் பலரும் அரசிடம் விளக்கம் கேட்டதற்கு அரசாணை : 116 , நாள் : 15.10.20 - ஐ வெளியிட்டு அரசாணை : 37 நாள் : 10.03.20 ஆனது தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் பொருந்தும் என்று வழங்கியுள்ள தெளிவுரையின் மூலமாக ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்பதை மறுதலிப்பதாகவே உள்ளது. 


இந்த பேரிடர் காலத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது. ஆகவே அரசாணைகள் : 37 , நாள் : 10.3.20 மற்றும் 116 , நாள் : 15.10.20 ஆகியனவற்றை திரும்பப் பெற்று ஊக்க ஊதியம் ( Incentive ) மற்றும் முன் ஊதிய உயர்வு ( Advance increments ) வழங்கிடுவதில் பழைய நடைமுறையையே தொடர்ந்திடுவதை உறுதி செய்திட வேண்டுகிறோம்.

14 comments:

  1. Panam , panam, panam, kudunga, Pathala, Pathala, pathala

    ReplyDelete
  2. Nearly 6 months did not work , haven't you raised any questions about that, Corona, Corona , Corona, chella kitty Corona.

    ReplyDelete
  3. காசு கொடுத்து வேலைக்கு வந்தால் அப்படி தான் இருக்கும்....Rs.25000/- முதல் 120000/- வரை மாதம் ஊதியம் இருந்தும்....பணம் பணம் மட்டும் தான் நினைப்பு....

    ReplyDelete
    Replies
    1. Neengalum thervu ezudhi govt job ku ponga Mr. senthil .. .. Ungalukum 25000 mudhal 120000 varai salary kidaikum. .

      Delete
  4. அந்த வேலைக்காக தானே அவர்கள் இந்த app ஐ பயன்படுத்துகிறார்கள். வேலைக்கு வருவதற்காகத்தானே இத்தனை aarp

    ReplyDelete
  5. Part time teachers ku help panuga

    ReplyDelete
    Replies
    1. Ne yaruiya theva ellama picha ketkaravan pola ketkuringa appadi ketkathinga sir

      Delete
    2. Yaru help pannanumnu ninikireenka inka comments potaravankala
      Ava nalla nilamiyil eruntha inka athukku comments pota poraan
      Avanukkae patthala appuram enka un kuriya kaetkarathu
      Nadakkum enpar nadakkathu
      Kitaikkum enpar kitaikathu
      Yarukkum nalla ennamae illa
      Elarukkum Epps nalla ennam varutho appa ellamae nallatha nadakkum
      Erikira naeruppil ennai ootrupavarkal
      Atuthavan kaalai vari veetuvatharkkakathan thinamum உயிர் பிறக்கிறான்

      Delete
    3. Yaru help pannanumnu ninikireenka inka comments potaravankala
      Ava nalla nilamiyil eruntha inka athukku comments pota poraan
      Avanukkae patthala appuram enka un kuriya kaetkarathu
      Nadakkum enpar nadakkathu
      Kitaikkum enpar kitaikathu
      Yarukkum nalla ennamae illa
      Elarukkum Epps nalla ennam varutho appa ellamae nallatha nadakkum
      Erikira naeruppil ennai ootrupavarkal
      Atuthavan kaalai vari veetuvatharkkakathan thinamum உயிர் பிறக்கிறான்

      Delete
    4. Yaru help pannanumnu ninikireenka inka comments potaravankala
      Ava nalla nilamiyil eruntha inka athukku comments pota poraan
      Avanukkae patthala appuram enka un kuriya kaetkarathu
      Nadakkum enpar nadakkathu
      Kitaikkum enpar kitaikathu
      Yarukkum nalla ennamae illa
      Elarukkum Epps nalla ennam varutho appa ellamae nallatha nadakkum
      Erikira naeruppil ennai ootrupavarkal
      Atuthavan kaalai vari veetuvatharkkakathan thinamum உயிர் பிறக்கிறான்

      Delete
  6. அரசு ஊழியர்களுக்கு சம்பளமே இனிமேல் இல்லை என்றால் மட்டும் என்ன நாடோ அல்லது அவதூறு பேசும் நீங்களோ உருப்பட போரிங்க ஒன்னுமில்லை. அல்லாத்தையும் அரசியல்வாதிகளே கொள்ளையடிக்க வசதியாக இருக்கும். இப்ப 7.70 லட்சம் க்கு அமைத sintex டேங்க் தண்ணீர் தொகையை பின்னர் அதில் ஒன்றை சேர்த்து 17.70 லட்சத்திற்கு அதே டேங்கை அமைத்து டெண்டர் டெண்டராக கொள்ளையடிப்பார்கள். அத்துல பாலம் சேத்துல ரோடுன்னு.

    ReplyDelete
  7. நியாயமாக பெற்று வந்ததை ஏன் நிறுத்தம் செய்தீரீர்கள் என்று தான் கேட்கிறார்கள். அதுக்கு போய் ஏன் நீங்க டென்சன் ஆயீட்டீங்க. பணம் பணம் எணம் என்று அரசியல் வாதிகள் டேங்கர் லாரியில் கொண்டு போன போது நீங்க எங்க போயீட்டீங்க. அப்போ வாய பொத்திட்டு இருந்திட்டு இப்ப ஏதேதோ பேசரீங்க. அவர்களை சொல்ல பயமா. அரசு ஊழியர்கள் என்ன நாட்டுக்கு இழிச்ச வாயன்களா?

    ReplyDelete
    Replies
    1. UG la oru degree PG la cross degree ithu yethukaga students ku knowledge increase pannava no..no... only for mony

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி