நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக அரசு பள்ளி மாணவன் சாதனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2020

நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக அரசு பள்ளி மாணவன் சாதனை!

 




மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று தேனி மாணவர் ஜீவித்குமார் சாதனை படைத்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி பிறகு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் அரசு பள்ளிகள் மாணவர்களில் முதல் மாணவராக சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதும் 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீதத்தினா் தோ்வில் பங்கேற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
.

14 comments:

  1. சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Super super congratulations brother

    ReplyDelete
  5. Super super congratulations brother

    ReplyDelete
  6. Congratulations dear ..God bless you.

    .

    ReplyDelete
  7. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நம் அரசு பள்ளி மாணவர்கள் இது போன்ற சாதனை பல படைக்க தகுதி உள்ளவர்கள் தான். ஆனால் இவர்களுக்கு free coaching முறையாக வழங்க ஆட்கள் இல்லை. அரசும் அதை நினைக்க வில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர் தேர்வில் தகுதி மற்றும் போட்டி தேர்வு படி தேர்வு செய்து அவர்களை கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க வேண்டும்.ஒரு பாடத்தில் குறிப்பிட்ட topic இல் சந்தேகம் என்று you tube பார்த்தால் வட மாநிலங்களில் நிறைய பயிற்சி அளிப்பவர்கள் உள்ளனர். அவை அனைத்தும் இந்தியில் உள்ளது. ஆனால் எளிமையான ஆங்கிலம் அல்லது தமிழ் இல் இத்தகைய சந்தேகம் தீர்பவர்கள் யாரும் இல்லை. ஏன் கல்லூரி பல்கலை பேராசிரியர்கள் அரசு ஊதியம் பெற்று இதை போல தமிழக மாணவர்க்கு at least you tube மூலமாவது பயிற்சி அளிக்கலாமே? இவர்களால் ஒரு சிலரை தவிர மற்றவர்களால் இதை செய்ய முடியாது. ஏனென்றால் இவர்கள் தங்கள் பாடத்தில் தகுதி தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அல்ல. Ph.d என தகுதி தேர்வில் விலக்கும் பெற்று வெறும் interview மூலம் தமிழக அரசு தெரிவு செய்கிறது. ஆந்திர அரசு போட்டி தேர்வு மட்டுமே, interview எதுவும் கிடையாது என்கிறது. மோடியும் இதை செய்ய வேண்டும் என்கிறார். மாணவர்கள் exam எழுதாமல் பாடங்களில் தேர்ச்சி கிடையாது என்று UGC, AICTE, உயர் நீதிமன்றம் கூறுகின்றன. ஆனால் பேராசிரியர் பணி நியமனம் மட்டும் தகுதி தேர்வு வேண்டாம் (ph.d இருந்தால்) போட்டி தேர்வு வேண்டாம். என்ன நிலமைக்கு தமிழ் நாடு செல்ல இந்த அரசியல் வாதிகள் வழி வகுத்து வைத்து இருக்கிறார்களோ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி