NEET மருத்துவக் கலந்தாய்வு: NRI இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2020

NEET மருத்துவக் கலந்தாய்வு: NRI இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து அறிவிப்பு

 


மருத்துவக் கலந்தாய்வில் என்ஆர்ஐ  மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் அக்.16-ம் தேதி வெளியாகின. இதில் நாடு முழுவதும் 56.44% மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்திய (என்ஆர்ஐ) மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய மாணவர்கள் அல்லது பிற ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் என்ஆர்ஐ பிரிவுக்கு மாற்றிக்கொள்ள விரும்பினால், நாளை (அக்.23) வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்குப் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக நீட்  2020 மதிப்பெண் சீட்டு, படிக்க வைப்பவரின் கடவுச்சீட்டு, விசா ஆகிய ஆவணங்கள், அவருக்கும் மாணவருக்குமான உறவு, படிக்க வைப்பவர் குறித்த தூதரகச் சான்றிதழ், முழு மருத்துவப் படிப்பையும் படிக்கவைப்பதாக அவர் உறுதியளிக்கும் நோட்டரி சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

இந்த விவரங்களை nri.adgmemcc1@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அக்.23-ம் தேதி வரை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி