RTE - இரண்டாம் கட்ட, இலவசமாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2020

RTE - இரண்டாம் கட்ட, இலவசமாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.



 தனியார் பள்ளிகளில், இரண்டாம் கட்ட, இலவசமாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.


கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து இல்லாத தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில், இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள், இன்றுடன் முடிகின்றன. 



இதையடுத்து, இன்னும் நிரப்பப்படாமல்உள்ள காலி இடங்களுக்கு,இரண்டாம் கட்ட சேர்க்கையை, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார், நேற்று பிறப்பித்தார்.


அதன் விபரம்:வரும், 10ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். அக்., 12 முதல் நவ., 7 வரை, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பங்கள் பெறப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர், நவ., 11ல் வெளியிடப்படும். காலி இடங்களை விட, கூடுதல் விண்ணப்பங்கள் இருந்தால், அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் நடத்தப்படும். நவ., 15ல், மாணவர்சேர்க்கை முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

6 comments:

  1. RTE free student admission nu sollitu panam student kiita pidunkariga. Nanga goverment school ye jollya padikka porom ponga

    ReplyDelete
  2. Ama free nu sollitu bus fee admission fee book fee athu ithunu vangitu 5000 tuition fee mattum illayama pongada nengalum unga rte m government school is better

    ReplyDelete
  3. இதெல்லாம் ஒரு நாடகம். அரசு பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமல் தவிக்கும் நிலையில், அரசே அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்களை தனியார் பள்ளியில் சேர சொல்கிறார்கள். இது என்ன நியாயம்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி