TRB - தேர்வில் முறைகேடு செய்த 196 பேர் பயோடேட்டா வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்! - kalviseithi

Oct 30, 2020

TRB - தேர்வில் முறைகேடு செய்த 196 பேர் பயோடேட்டா வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

 


அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 196 பேருக்கு, அரசு பணியில் சேர, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,060 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2017ல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியான போது, தேர்வை சரியாக எழுதாத, 196 பேர் தேர்ச்சி பட்டியலில் முன்னிலை பெற்றனர். இதுகுறித்து, தேர்வர்கள் பலர் சந்தேகம் எழுப்பியதுடன், அவர்களின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் விபரங்களை திரட்டியதில், 196 பேரும், பல லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்தது.


இதுதொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் புகார் அளித்தது. விசாரணையில், கணினி ஆப்பரேட்டர் வழியாக, மதிப்பெண்களை மட்டும் கூடுதலாக பதிவு செய்து, மோசடி செய்தது தெரியவந்தது.இந்த விவகாரம், உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், புதிதாக தேர்வை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட், 196 பேர், வாழ்நாள் முழுதும் அரசு பணிக்கான தேர்வு எழுத, தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், 196 பேரின் பெயர், முகவரி, கல்வி தகுதி, ஜாதி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


அவர்களில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்; மற்றவர்கள் கலை, அறிவியல் படித்தவர்கள். மொத்தம், 196 பேரில், 58 பேர் பெண்கள்.தடை செய்யப்பட்டவர்களின் முகவரிகள் அடிப்படையிலான பட்டியலில், மதுரை, துாத்துக்குடி, தென்காசி, செங்கல்பட்டு, நீலகிரி, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.


சேலம், கோவை, திருச்சி, அரியலுார், திண்டுக்கல், தேனி, சென்னை, நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.

28 comments:

 1. 2013tet posting vangunavungalla pathi per ippudithan poirunganganu weightge al pathikka pattavargal oru periya list veliettanga antha listaum konjam prisilanai Panna 2013,2017,2019 tet pass pannavangalukku nambikkaium vaippum kidaikum

  ReplyDelete
 2. Most of the candidates lalgudi in trichy district

  Team head christraja from lalgudi

  ReplyDelete
 3. 94 நபர் பாலிடெக்னிக் முறைகேட்டில ஈடுபட்ட கேண்டிடேட் பிசி பிரிவினர்கள் இதேபோன்றுதான் முதுகலை வேதியியல் தேர்வுப் பட்டியலும் முறைகேடாக 31% பொதுப்பிரிவு பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது இதுதான் நீதியரசர் கண்டித்து இது இட ஒதுக்கீட்டிற்கு தவறானது பொதுப்பிரிவில் அனைவரும் இடம்பெறவேண்டும் தகுதி தகுதி அடிப்படையில் அப்பட்டமாக தெரிகிறது டிஆர்பி போட்டி முறைகேடு இதற்கு மூலகாரணமாக உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும் எய்தவன் எங்கோ இருக்கிறார் முதலில் அந்த நபர்களை களை எடுக்க வேண்டும் இதுதான் ஊழலுக்கு எதிரான செயல்

  ReplyDelete
  Replies
  1. இங்க வந்து பதிவிடாதீர். கோர்ட்டுக்கு போய் வழக்குப் போடு. கோர்ட்டின் காலத்தை விரயம் பண்ணியதாக அபராதம் விதிப்பாங்க கட்டிட்டுவா..முட்டாள்.. நேர்மையானவனா இருந்தா வழக்குத்தொடு. நாய்தான் கடிக்காதுஆனா சந்துசந்தாப் போய் குரைக்கும்...வேதியல் பாடத்திற்கு Bc பிரிவினர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நவம்பர்18ஆம் தேதி இறுதிப் தீர்ப்பு வருது wait. & see

   Delete
  2. விடுங்க Sir என்ன நடந்ததுன்னே தெரியாம அந்த முட்டாள் சொல்வதைக் கண்டுக்காதீங்க. தீர்ப்பு வரட்டும் பார்ப்போம்..

   Delete
 4. பாலிடெக்னிக் பட்டபடிப்பு அடிப்படை முதுகலை பட்டப்படிப்பு ஆனால் தேர்வாணையம் இளங்கலை பட்டப்படிப்பு வி ஏ பிஎஸ்சி மட்டும் குறிப்பிட்டுள்ளது இஞ்சினியரிங் அல்லாத பணியிடங்கள் இதுவே ஒரு முறைகேடாக தெரிகிறது இவர்கள் தேர்வு பட்டியலில் தேர்வாகி உள்ளவர்களா அல்லது ஆள் மாறாட்டம் செய்து நேம் வேறு என்பதை நேம் லிஸ்ட் ஐ வைத்து அவருடைய கல்வித்தகுதி உண்மைதானா என்பதை சரி பார்த்தால் உண்மை தெரியும்

  ReplyDelete
 5. when will come list for economics

  ReplyDelete
 6. correct decision trb board and salute trb board.

  ReplyDelete
 7. All decisions taken by trb is appreciated We r awaiting for those lost chance in pgtrb 2019 ,New pgtrb recruitmentas per trb annual planner published.

  ReplyDelete
 8. What sir trb published simply taking teaching experience marks then employment seniority marks.If that marks added means Many of them got posting in 2019 pg trb. At present no job no money.what g.o this Tamil Nadu government is following.

  ReplyDelete
 9. ஆசிரியர்களின் நியமனதயும் ஆய்வு செய்யவும்

  ReplyDelete
 10. பயோடேட்டா உண்மையாக தெரியவில்லை இஞ்சினியரிங் அல்லாத பணிக்கான கல்வித் தகுதி முதுகலை பட்டப்படிப்பு குறிப்பிடப்படவில்லை இளங்கலை வி எஸ் சி பி ஏ குறிக்கப்பட்டுள்ளது

  ReplyDelete
 11. 2012,2013 TET layum idhe nadanthuruku, 60% teachers (fraud panni than job poirukanga) avangalayum find out pannuvangala??????

  ReplyDelete
  Replies
  1. Tamilnadu pass anavanga total list eduthu comm based area based Reserch panni courtku tharanum, pavam hardwork panni tet paditha manavargalukku vaaippu kidaikkum

   Delete
 12. Name changing native changing trb allwas cofusion

  ReplyDelete
 13. most of the candidates in trichy dt LALGUDI tk
  TEAM LEADER - ladder coaching centre Rajesh

  ReplyDelete
 14. இறுதி(6 வது) பருவ தேர்வு எழுதியவர்கள்
  October 30, 2020 at 10:04 PM
  இறுதி(6 வது) பருவ தேர்வு எழுதியவர்கள் அதில் pass ஆகிட்டா 1முதல் (5வாது)பருவ அரியர் இருந்தால் பாசா?.

  ReplyDelete
 15. முக்கியமாக 2012 90 நிமிட தேர்வு மூலமாக பணி நியமனம் செய்யப்பட்ட அதி புத்திசாலிகளையும் விசாரணை செய்யவும். புத்திசாலிகளை கண்டிப்பாக ஆய்வு செய்யவும்

  ReplyDelete
 16. 2012 tet தேர்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அறிவொளி ௭ன்ற ஆசிரியர் புரோக்கர் ஆக இருந்தார்.. 100℅ உண்மை 100℅ உண்மை

  ReplyDelete
  Replies
  1. அறிவொளி என்கிற ஆசிரியர் தற்போது போடிநாயக்கனூர் அருகில் உள்ள தர்மத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆக பணியாற்றி வருகின்றார்.. சமீபத்தில் கூட வனத்துறையில வேலை வாங்கி தருவதாகக் கூறி சிலரை ஏமாற்றியவன்

   Delete
 17. Public
  October 31, 2020 at 6:36 PM
  2012 tet தேர்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அறிவொளி ௭ன்ற ஆசிரியர் புரோக்கர் ஆக இருந்தார்.. 100℅ உண்மை 100℅ உண்மை

  ReplyDelete
  Replies
  1. விசாரணை வேண்டும்

   Delete
  2. Cbi case podanum sir, pavam unmaiya hardwork pannavanga.

   Delete
 18. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வுக்கு பயன்படும் வினாக்கள்.... PHYSICS ONLY
  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfHN5f7SmPZbyEKNt3fGa7vSEmWLgF2lJkOZeW4dK06MPyS2Q/viewform?usp=sf_link

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி