தமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா? - kalviseithi

Nov 13, 2020

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா?

 


பொதுத்தேர்வு பயம் 

தமிழகத்தில் கல்வித் துறை எடுத்து வரும் நிலைப்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தமிழ கத்தில் மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது . பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன . கடந்த 8 மாதங்களாக பள்ளி , கல்லூரிகள் திறக் கப்படவில்லை . இந்த நிலையில் பள்ளி , கல்லூரிகள் நவ . 16 ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது . 

இதையொட்டி பள்ளிகளில் நடத்தப்பட்ட கருத் துக் கேட்பு கூட்டங்களில் பள்ளி திறக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . நவம்பர் , டிசம்பர் மாதங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளைத் திறக்கக்கூடாது அப்படி திறந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் . பள்ளிகளைத் திறப்பதில் தமிழக அரசு அவசரம் காட்டக்கூடாது என்றும் , கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்பு பள்ளி , கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும் பெற்றோர் , அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர் . 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண் ணிக்கை 7 லட்சத்தை தாண்டி விட்டது . சமீபத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது . இப்பி ரச்னை தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன் , பி.புகழேந்தி ஆகியோர் , “ கொரோனாவால் தற்போது இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதையெல் லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கலாமே " என்று கேள்வி எழுப்பியிருந்தது . இதன் தொடர்ச்சியாக , நவ . 16 ம் தேதி பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் என்ற உத்தரவை தமி ழக அரசு நேற்று ரத்து செய்துள்ளது . 

அத்துடன் , அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் , முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி , பல்க லைக்கழகங்கள் டிச . 2 ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது . தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படா விட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன . பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புக ளில் ஆசிரியர் பாடம் நடத்துவதற்குப் பதில் , யூடி யூப் மூலம் தான் பாடம் நடத்தப்படுவதாக புகார் உள்ளது . 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ , மாணவியர் அனைவருக்கும் ஆன்லைனில் படிக்கும் வசதி கிடைக்கவில்லை . குறிப்பாக , அரசு பள்ளி கிராமப்புற மாணவர்க ளுக்கு ஆன்லைன் வகுப்புகளைச் சந்திக்க ஆன்ட்ராய்ட் மொபைல் போன் வசதியில்லாமல் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் .

 இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அச்ச உணர்வு 10 , 12 படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் மனநெருக்கடியை உருவாக்கியுள்ளது . ஆசிரியர் , மாணவர் உறவே ஆறு மாதங்களுக்கு மேல் இல்லாத நிலையில் , பாடத்திட்டங்களில் சந்தேகம் என்றால் , யாரிடம் கேட்பது என்ற மனஉளைச்சல் மாணவர்கள் மத்தி யில் உள்ளது . இந்த நிலையில் பொதுத்தேர்வு என்ற பூதம் மாணவர்களை மிரட்டி வருகிறது . இந்த ஆண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது . கொரோனா பாதிப் பால் அங்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்ப டாத நிலை உள்ளது . 

எனவே , தமிழக அரசும் இந்த ஆண்டு 10 , 12 ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர் . மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வை மதிப்பிட்டு , அவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான பாடங்களைத் தேர்வு செய்வதற்கு வழிவகை செய்வதே சாலச்சிறந்தது என்ற கல்வியா ளர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு ?

16 comments:

 1. TNEB Accountant- Online class and
  STUDY MATERIALS AVAILABLE.
  1. Unit wise study material
  2. Concept wise explanation
  3. Multiple choice questions
  4. Answer with explanation
  5. Total 1046 pages
  Contact : ST.XAVIER'S ACADEMY,
  NAGERCOIL, CELL:8012381919

  ReplyDelete
 2. லூசுதனமான பதிவு

  ReplyDelete
 3. சொன்ன கல்வியாளர் படிப்பறிவே இல்லாத.................. முட்..........சொல்வார்கள்

  ReplyDelete
 4. Nalla varuvanga govinda govinda

  ReplyDelete
 5. எங்கடா கடைசியா தேர்வு நடந்தது

  ReplyDelete
  Replies
  1. 11 public exam mark base la higher study Panna sollalam ...innum 6 month ku leave vitudunga

   Delete
 6. ஓ அடுத்த திட்டம் இதுவா.... கடைசில பரிச்சைக்கு வேட்டா...இதுவரைக்கும் ஸ்கூல் ....இப்ப பரிச்சை...

  ReplyDelete
 7. இப்படியான யோசனையை கூறுபவர்கள் கல்வியாளர்களே கிடையாது. ஏன்டா கொஞ்சம் விட்டா, LKG பேரு சேர்த்தா போதும் 12ஆம் வகுப்பு பாஸ் னு போட சொல்லுவிங்க போல...

  எனது கருத்து...2020-21கல்வியாண்டை ரத்து செய்துவிட்டு.... மீண்டும் மாணவர்கள் இதே வகுப்பில் 2021-22 கல்வியாண்டில் தொடர்ந்து படிக்க வேண்டும்...

  ReplyDelete
 8. andha paguthiyil parabarappu
  marma nabargal thakkuthal
  andha varisaiila kalviyalargal karuthu


  yaru andha kena kooomuttai kalviyalargal...

  kadaisila vecha exam vechu enaku mbbs degree kudunga nan avanuku oosi poduren...

  ReplyDelete
 9. யார் இந்த கல்வியாளர்கள். படிக்காமலேயே தேர்ச்சி என்பவர்கள்.

  புத்தகத்தை பார்த்து தேர்வு வழுதலாமே

  ReplyDelete
 10. ஏண்டா, அட்மின் நாயே! இது போல தலைப்பு எழுதி தமிழ்நாட்டிலும் கல்வி அறிவை காலி பன்னிடுங்க, எவன் சொன்னான், கல்வியாளர் யார் அப்படி படிக்கமல் தேர்ச்சி பெற சொல்கிறவன் எப்படி கல்வியாளனா இருக்க முடியும்..

  ReplyDelete
 11. தேர்வு கட்டணம் செலுத்தியவர்கள் தேர்ச்சி என அறிவித்த Gov ஆச்சே! மாணவனின் எதிகாலத்தை பற்றி அவங்களுக்கு என்ன கவலை? படித்த அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கிறதா இல்லையே தனியார் நிருவனத்தில் வேலைக்காக சர்டிபிகேட் கொடுக்கும்போது "கொரோனா பாஸா"ன்னு கேவலாமா பார்க்கும்போது படித்த மாணவன் கூனி குருகி நிப்பானே
  படிச்சவங்க,படிக்காதவங்க எல்லாரும் ஒரே கணக்குதானே! திறமைசாலிக்கு மனம் வலிக்கும் கல்வியாளர்களே!மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்காதீர்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி