அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள் ! - kalviseithi

Nov 16, 2020

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள் !

 

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி :பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை ( பள்ளி திறப்பதற்கு முன் : 


1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் . 


2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் alvi : blo செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


பள்ளிகள் திறந்த பின்


1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.


2. மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது . அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.


3. பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.


13 comments:

 1. 👨‍🏫ஆசிரியப்பணி அறப்பணி! அதற்கு உன்னை அர்ப்பணி !!👩‍🏫இது பழமொழி..

  😭ஆசிரியர் பணி வேதனை பணி! அதைவிட்டு தூரமாக விலகு நீ !!😭
  இது புதுமொழி...

  🏫இது தனியார் பள்ளி ஆசிரியராகிய என் மன வேதனை....🚦

  👉பொதுவாக ஆசிரியர் என்பவர் தினமும் கற்றுக்கொண்டு அதனை நம்முடைய மாணவ-மாணவிகளுக்கு கற்பிப்பவன் அதனை தெளிவாக எடுத்துக் கூறும் ஆசிரியரே...

  🙏முதலில் எனக்கு என் பணியைப் பற்றியும் சமுதாயத்தில் என் நிலையைப் பற்றியும் கற்பித்த "கொரோனோவிற்கு" நன்றி!!!🙏

  ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வரை நானும் ஒரு ஆசிரியர் என்று சொல்வதை நினைத்து பெருமைப்பட்டேன்.
  ஆனால் தற்போதைய இந்த நவம்பர் மாதத்தில் நான் ஆசிரியரா? என நினைத்து வேதனைப்படுகிறேன்...ஏனென்றால் தற்போதைய என் குடும்ப நிலையை நினைத்து...

  கடந்த சில மாதங்களாக என் நிர்வாகம் எனக்கு கொடுக்கின்ற சிறு தொகையை வைத்து பிழைத்தேன்.

  😭"ஆனால் தற்போது என் நிலை என்ன"?😭

  நிர்வாகமும் பாவம் தானே அவர்களும் எவ்வளவு தான் எங்களுக்கு கொடுத்து உதவ முடியும் அவர்களின் சூழ்நிலையும் தற்போது கேள்விக்குறிதான்..

  👨‍🎓நான் கற்றுக்கொண்ட மிகச்சிறப்பான பாடம் இது......👩‍🎓

  *ஒரு டாக்டருக்கு மற்றொரு டாக்டர் உதவி செய்கிறார். ஒரு சிறு தொழிலாளிக்கு கூட மற்றொரு சிறு தொழிலாளி உதவி செய்கிறார்கள் இதற்கு காரணம் தன் துறையிலும் தன் தொழிலும் நல்ல வளர்ச்சி வேண்டும் என்பதற்காக..ஆனால் என் ஆசிரியர் தொழில் மட்டும்தான் ஒரு ஆசிரியருக்கு மற்றொரு ஆசிரியர் கூட உதவி செய்வதில்லை..

  *மத்திய மாநில அரசுகள் தான் நமது தனியார் பள்ளி ஆசிரியர் நிலையை புரிந்து கொள்ளவில்லை..
  நமது அரசு பள்ளி ஆசிரியர்களும் கூட நம் நிலையை புரிந்து கொள்ளவில்லையே?

  *நமது அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்புகள் , சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் நினைத்திருந்தால் தாங்கள் பொதுவாக பள்ளி செல்லும் நாட்களில் செலவு செய்யும் தொகையை தனியார் பள்ளி ஆசிரியருக்கு சிறு நன்கொடையாக கொடுத்திருக்கலாமே?
  உங்கள் நன்கொடை தொகை தனியார் பள்ளி 10 ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் மேலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தங்களை வாழ்த்தி வணங்கி இருக்குமல்லவா...!

  *மத்திய மாநில அரசே..
  தனியார் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் நடத்தும் பொது தேர்தல் பணிக்கு எங்களுக்கு உதவி தேவை..
  அரசுத் தேர்வு பணிக்கும் எங்கள் உதவி தேவை, மதிப்பீடு பணிக்கும் எங்கள் உதவி தேவை ஆனால் தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் வாழ்க்கைக்கு தாங்களே ஏதும் உதவி செய்யமாட்டீர்கள் அல்லவா?

  *இதுவரை பள்ளிகள் திறக்கப்படாததால் பல இடங்களில் பெண் பிள்ளைகள் குழந்தை திருமணம் நடைபெறுகின்றது பல இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகின்றன. நூறு வருடங்களுக்கு பின்னோக்கி சென்று விட்டோம்.

  *கல்வி நிலை பாதிக்கின்ற ஒரு சமுதாயமாக மாறி வருகின்றது....
  என்ன செய்வது நாம் அந்த பணியை விட்டாலும் அந்த பணியின் மகத்துவத்தை நாம் எப்போதும் மறக்கக்கூடாது அல்லவா?

  *ஒரு சிறிய காய்கறி கடையோ அல்லது ஏதாவது ஒரு கடையில் தொழிலாளியாக சேர்ந்துதான் வாங்கிய கடனையும் வாழப்போகும் நாட்களையும் நான் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது....

  அரசு பள்ளி ஆசிரியர்களை குறை கூறக் கூடிய பதிவு அல்ல... இப்படி செய்திருக்கலாம் என்று ஒரு சிறிய யோசனை.


  இது என்னுடைய மன வேதனை இதைப் போன்று மன வேதனை உள்ளவர்கள் இந்த பதிவை பகிர்ந்து மனவேதனையை போக்கிக் கொள்ள வேண்டியதுதான்...

  இவன்
  A.ராஜி MSc.,B.Ed.,DSS.,
  வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்,
  சேலம்.

  ReplyDelete
  Replies
  1. Yedapadiyaridam nere sendru thangalin mana vedhanaiyai kooralame sir

   Delete
  2. Athu eggaluku therium velaku ennai.

   Delete
 2. வனத்துறை தேர்வு பட்டியல் 1:3 எப்போது??

  ReplyDelete
 3. Part time teachers ku poruthuma

  ReplyDelete
 4. கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.
  10 வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இலவச தையல் பயிற்சி நடந்தது.. அதில் கலந்து கொண்ட ஒரே ஆண் நான் மட்டுமே. என் நண்பர்களே என்னை கேலி செய்தனர்.. என் குடும்ப வறுமை என்னை அனைத்திலும் சகிப்புள்ளவனாக மாற்றியது. பயிற்சியை முடித்த எனக்கு ரஜினி மன்றத்தாரே இலவச தையல் மிசின் கொடுத்தனர். கர்சிப், லுங்கி தைக்கும் ஆர்டரும் கொடுத்தனர். மேற்கொண்டு தையல் சுயமாக கற்றுக் கொண்டேன். தற்போது தீபாவளி வருமானம் மட்டும் 2 மாதத்தில் 73240 ரூபாய்.என் வீட்டில் வைத்தே தைக்கிறேன். என்னை கேலி செய்த என் நண்பர்களின் துணியை மட்டுமல்ல அவர்களின் குடும்ப பெண்களின் துணியையும் தான். நீங்கள் சொன்ன இந்த கொரானா கால வறுமை என்னையும் புலம்ப வைத்திருக்கும்.. எப்போது தெரியுமா.. வாழ்க்கைக்கு எது அவசியம் என்று தெரியாமல் அதை கற்றுக் கொள்ளவும் செய்யாமல் மற்றவர்க்கு போதிக்க சென்று இருந்தால் . ... நமக்கே வாழ்த் தெரியாத போது மற்றவர்க்கு எப்படி கற்றுக் கொடுக்க முடியும் நண்பா..

  ReplyDelete
  Replies
  1. அருமை... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
   இங்கலாம் b.ed படிச்சிட்டா உடனே வாத்தியார் வேலை தான் வேணுமாம்..... அதும் அரசாங்க வாத்தியார் தான்.... அப்பதான் கொரோனா காலத்திலும்...... ச்சைக்.....

   Delete
  2. Hello trb fans club lusu Ni periya arivu jevi pola comment podatha lusu

   Delete
  3. Trb fan clue uggaluku uncel job ready ya eruku.atharku vazhthukal.

   Delete
 5. தற்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. பல இடங்களில் இலவச தையல், கம்ப்யூட்டர், சமையல், மெழுகுவர்த்தி, சோப்பு, சாம்பிராணி, ஆடு மாடு கோழி வளர்ப்பு, மெக்கானிக், எலக்ட்ரீசியன், JCB ஆபரேட்டர், ஏசி பிரிட்ஜ் செல்போன் டிவி மெக்கெனிக்... போன்ற எண்ணற்ற பயிற்சிகளை நல்ல எண்ணம் கொண்ட பலர் வழங்குகிறார்கள்.. அனைத்துமே 3 மாதத்தில் கற்றுக் கொள்ளக் கூடியவை.தேடிச் சென்று கற்றுக் கொண்டு இனிவரும் இது போன்ற நெருக்கடியான காலங்களில் உங்களின் பொருளாதார பிரச்சினையை சரி செய்து கொள்ள முயற்சிக்கவும்.. வாழ வழி சொல்லி விட்டேன். இதையும் கேலியும் கிண்டலுமாக கமண்ட்ஸ் அனுப்ப இருக்கும் நண்பர்களின் துணியையும் தைத்துக் கொடுக்க ஆவலாய் இருக்கிறேன்.

  ReplyDelete
 6. Nagga other work seiya ready.but ur jevalamana govt ta theliva oru desion eduka sol.ni sollura class pogalam nu ninaikum pothu udane ur govtment r in kitta dress thakkura politision solluvanuga ennum 10days la school open nu.athai nambi erupom.then after 10days avanugga solluvanuga now not school open nu.so ugga kitta dress thaikkara person r nigga class poravagga kitta first theliva solla sollugga when school open and when they give proper reduce syllabus nu

  ReplyDelete
 7. dei, avaru evlo theliva solraru.. un amma ku oru saree vangi kuduka thuppu irukada unaku.. neyellam vanthutta cella thookinu..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி