மருத்துவ கட்டண பிரச்னையால் நிராகரிப்பு: அரசு பள்ளி மாணவிகள் 3 பேரை சென்னைக்கு அழைத்து ஒதுக்கீட்டு ஆணை. - kalviseithi

Nov 24, 2020

மருத்துவ கட்டண பிரச்னையால் நிராகரிப்பு: அரசு பள்ளி மாணவிகள் 3 பேரை சென்னைக்கு அழைத்து ஒதுக்கீட்டு ஆணை.

 


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங்கின் அடுத்தகட்டமாக, அனைத்து பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் வரும் தகுதியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 20ம் தேதி வரை கவுன்சலிங் நடந்தது. அப்போது, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை மாணவ மாணவியர் சிலர் தேர்வு செய்துவிட்டு கட்டணம் காரணமாக ஒதுக்கீட்டு ஆணையை பெறவில்லை. அவர்களில் திருப்பூரை சேர்ந்த திவ்யா, ஈரோடு கவுசிகா ஆகியோர் மீண்டும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.

நேற்றைய கவுன்சலிங்கில் இடங்களை தேர்வு செய்த 10 மாணவ மாணவியருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இட ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி பேசியதாவது: முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் இந்த கவுன்சலிங்கில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கான வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய கவுன்சலிங்கில் 15 பேர் பங்கேற்கவில்லை. மருத்துவ படிப்புக்காக உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ கவுன்சலிங்கில் விடுபட்ட மாணவர்களுக்காக புதிய வாய்ப்பை உருவாக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே அதிக அளவில் எம்டி, எம்எஸ் இடங்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியில் ரூ.250 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடக்கிறது. இதையடுத்து கோவை மருத்துவக் கல்லூரியில் விரவிாக்க பணிகள் தொடங்கும்.

மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைப்பு நிவர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் இன்று (24ம் தேதி) செவ்வாய்க் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் 30ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான அறிக்கை மருத்துவக்கல்வி தேர்வுகுழு இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் இன்று கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி